காஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி “கோஸ்டி” !

1

காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் ஹாரர் காமெடி படத்திற்கு “கோஸ்டி” என தலைப்பிடப்பட்டுள்ளது. “குலேபகாவலி” ஹிட் படத்தை இயக்கிய இயக்குநர் S.கல்யாண் இப்படத்தினை இயக்குகிறார்.

தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் கூறியதாவது…

பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக மிளிரும் நடிகை காஜல் அகர்வால் அவர்களுடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. இப்படத்தின் கதாப்பாத்திரத்திற்காக அவர் முழு உழைப்பை தந்திருக்கிறார். காவல் அதிகாரியாக கச்சிதமாக தன்னை பொருத்திகொண்டிருக்கிறார். அவரது கதாப்பாத்திற்கு இப்படத்தில் பல ஆக்சன் காட்சிகள் உண்டு. அதற்காக அவர் கடுமையாக பயிற்சி எடுத்து தன்னை தயார்படுத்தி கொண்டார். இப்படம் அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக, மிகப்பெரும் வெற்றிப்படமாக இருக்கும்.

இயக்குநர் S.கல்யாண் கூறியதாவது…

காஜல் அகர்வால் அவர்களுடன் வேலை செய்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. அவரது உற்சாகமும் துறுதுறுப்பும் படப்பிடிப்பின் முதல் நாள் முதல் இறுதிநாள் வரை அப்படியே இருந்தது. அவர் ஒரே டேக்கில் நடித்து முடித்துவிடும் திறமை கொண்டவர் ஆனால் அதை விடவும் அவரது கதாப்பாத்திற்காக அவர் தன்னை தயார்படுத்திகொண்ட விதம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எனது தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இருவருக்கும் அவர்கள் தந்த அளப்பரிய ஒத்துழைப்பிற்காக, மிகப்பெரும் நட்சத்திர கூட்டத்தை அளித்ததற்காக நன்றி கூறிக்கொள்கிறேன். இக்கதை பல கிளைகதைகள் மற்றும் கதாப்பாத்திரங்கள் கொண்டது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கதைக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு கதாப்பாத்திரத்தை விலக்கினால் மொத்த கதையும் விழுந்துவிடும். கே எஸ் ரவிக்குமார், சுப்பு பஞ்சு அருணாச்சலம்,மொட்ட ராஜேந்திரன் என ஒவ்வொருவரும் இப்படத்தில் அருமையான பங்களிப்பை தந்துள்ளார்கள்.

“கோஸ்டி” திரைப்படம் சென்னை மற்றும் பாண்டிச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் இசை, ட்ரெயலர், வெளியீட்டு தேதி பற்றிய விபரங்கள் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.

இயக்குநர் S.கல்யாண் எழுதி இயக்கும் “கோஸ்டி” திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரித்துள்ளனர். காஜல் அகர்வால் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கே எஸ் ரவிக்குமார், சுப்பு பஞ்சு அருணாச்சலம்,மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன், ஊர்வசி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், ஶ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, சந்தான பாரதி, நரேன், தங்க துரை மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவினர்

இசை – சாம் CS

ஒளிப்பதிவு – ஜேக்கப் ரத்தினராஜ்

கலை – ஆனந்த்

படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி,

சண்டைப்பயிற்சி – பில்லா ஜெகன்

பாடல்கள் – விவேக், கு.கார்த்திக்

எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – A.குமார்

புரடக்சன் எக்ஸிக்யூட்டிவ் – K. சக்திவேல், சுசி காமராஜ்.

Leave A Reply

Your email address will not be published.