நடிகை காஜல் அகர்வால் சுமார் கடந்த 12 வருடமாக சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்துக் கொண்டிருந் தார். தமிழ் தெலுங்கு இந்தியில் முன்னணி ஹீரோ களுடன் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடிக்கிறார்.கொரோனா ஊரடங்கில் கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்த நிலையில் அவரிடம் குடும்பத்தினர் பேசி திருமணத்துக்கு சம்மதம் பெற்றனர். உடனடியாக மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவுடன் திருமணம் பேசி முடிக் கப்பட்டதுடன் நிச்சயதார்த் தமும் நடந்தது.
இதுபற்றிய காஜல் கூறும்போது, ‘
’நான் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொள்கி றேன் என்பதைப் பகிர்ந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அக்டோபர் 30, 2020 மும்பை யில், எங்கள் நெருங்கிய குடும்ப உறவினர்கள் சூழ ஒரு சிறிய, விழாவில் திருமணம் நடக்கிறது. இந்த கொரோனா தொற்றுநோய் காலம் இந்த மகிழ்ச்சியான தருணத்தை தந்திருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம், நீங்கள் அனை வரும் எங்களை உற்சாகப் படுத்துவீர்கள் என்பது எனக்கு தெரியும் “என்று அதில் குறிப்பிட்டிருந்தார்
இன்று மும்பையில் உள்ள பங்களாவில் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. காஜல் கழுத்தில் கவுதம் கிட்ச்லு தாலி அணிவித்தார். முன்னதாக நேற்று மெஹந்தி விழா நடந்தது.