தியேட்டர் திறக்க அனுமதி:முதல்வருக்கு கலைப்புலி எஸ்.தாணு நன்றி

130

கொரோனா ஊரட்ங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்படிருந்தன கடந்த 7 மாதங்களாக மூடியிருந்த தியேடர்களை வரும் 10ம் தேதி  திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கினார். அதற்காக முதல்வருக்கு  தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு நன்றி தெரிவித்திருக்கிறார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை துணை தலைவர், முன்னாள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்  கலைப்புலி எஸ். தாணு (தயாரிப்பாளர் – V CREATIONS ) கூறியதாவது:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் முதல் அக்டோபர் வரை பல மாதங்களாக திரையரங்குகள் மூடிக்கிடந்தது. தற்போது நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கி பல்லாயிரம் சினிமா துறை மற்றும் திரையரங்க ஊழியர்களின் குடும்பத்தில் விளக்கேற்றிய தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி ,  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு  இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கலைப்புலி எஸ்.தாணு கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.