கமல் இன்று டிஸ்சார்ஜ்

11

காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் கமல் இன்று(ஜன.,22) மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிறார்.

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல் 18ம் தேதி காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பில் இருந்த கமல் இன்று மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார். ஒரு வாரத்திற்கு வீட்டில் ஓய்வெடுக்கிறார்.

இணையதளம் வாயிலாக மக்களிடமும் கட்சி நிர்வாகிகளுடனும் பேச உள்ளார். கட்சி பணிகளை ஆரம்பிக்க உள்ளார். விரைவில் கட்சி பணியை துவங்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.