செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம் மாவட்டத்தில் கமல்ஹாசன் பிரசாரம்

2ம்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் அறிவிப்பு..

18

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மதுரையில் தொடங்கி நடத்தி வருகிறார். அடுத்தகட்டமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட சுற்றுய் பயணங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைவருக்கும்‌ வணக்கம்‌.

“சீரமைப்போம்‌ தமிழகத்தை” என்கின்ற மிக உன்னதமான நோக்கத்துடன்‌ வரவிருக்கின்ற சட்டமன்றத்‌ தேர்தலில்‌ வெற்றி பெறவேண்டும்‌ என்கின்ற ஒற்றைக்‌ குறிக்கோளுடன்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ நமது தலைவர்‌, நமது கட்சியின்‌ இரண்டாம்‌ கட்ட தேர்தல்‌ பிரச்சாரத்தை வருகின்ற டிசம்பர்‌ 20,21,22 ஆகிய தேதிகளில்‌ காஞ்சிபுரம்‌ மற்றும்‌ விழுப்புரம்‌ மண்டலங்களில்‌ நிகழ்த்த விருக்கின்றார்‌.
தலைவர்‌ தமது பிரச்சாரப்‌ பயணத்தை மேற்கொள்ளும்‌ செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கடலூர்‌ மாவட்டங்களின்‌ கட்டமைப்பு மாவட்டச்‌ செயலாளர்‌ அப்பகுதியில்‌ நடைபெறும்‌ அனைத்து நிகழ்ச்சிகளையும்‌ பொறுப்பேற்றுச்‌ செய்ய வேண்டும்‌.
கட்டமைப்பு உறுப்பினர்களும்‌ சார்பு அணிகள்‌ உறுப்பினர் களும்‌ இணைந்து செயல்பட்டு, நமது தலைவரின்‌ இந்தப்‌ பிரச்சார பெருநிகழ்வினை சீரும்‌ சிறப்புடனும்‌ நடத்த வேண்டும்‌
என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.
குறிப்பு : அனைவரும்‌ கோவிட்‌ 19 விதிமுறைகளை கட்டாயம்‌ பின்பற்ற வேண்டு மென்றும்‌, அதை நிறைவேற்ற ஒத்துழைக்கும்படியும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.