நம்மவர் கமல்ஹாசனின் 67 வது பிறந்தநாள் விழா துவக்க நிகழ்வு.

நாளை நடக்கிறது

1

நம்மவரின் 67 வது பிறந்தநாள் விழா துவக்க நிகழ்வு.

இடம் : தலைமை அலுவலகம், சென்னை.
நாள் :  நவம்பர் 1 2021.
நேரம் : காலை 10.00 மணி.

வணக்கம்.
நமது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவரின் 67 வது பிறந்தநாளான நவம்பர் 7 ஐ சிறப்புடன் கொண்டாட நமது கட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி நாளை நவம்பர் 1 முதல் நம்மவரின் பிறந்த நாளான நவம்பர் 7 வரை  தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேருக்கு  “நம்மவரின் ஐயமிட்டு உண்” என்ற பெயரில் அன்னதானம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் தொடக்க நிகழ்வாக நாளை ( நவம்பர் 1 ) காலை 10.00 மணியளவில் நமது தலைமை அலுவலத்திலிருந்து ஒன்பது வாகனங்களில் சுமார் ஏழாயிரம் பேருக்கான உணவை வழங்கிடும் பயணத்தை நம்மவர் தனது கரங்களால் கொடியசைத்து துவக்கிவைக்க இருக்கிறார் என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

நம்மவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இந்த பயன்மிகு துவக்க நிகழ்வை சிறப்பிக்க கட்சி சொந்தங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு :
நிகழ்வில் kovid 19 நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஊடகப்பிரிவு
மக்கள் நீதி  மய்யம்
சென்னை

Leave A Reply

Your email address will not be published.