இன்று காலை மலையாளத்தில் முதிர்ந்த இயக்குனர் கே.எஸ். சேதுமாதவன் நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். கமல் சாரை மலையாளத்தில் அறிமுக படுத்தியவர் இவர்.
கே.எஸ். சேதுமாதவன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். pic.twitter.com/CXPcyVuMDA
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021