கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்

வீடு திரும்பினார்

14

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழு வதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சாலை கூட்டங்கள், பொதுக் கூட்டங் கள் என பிரசாரம் மேற்கொண் டார்.
தமிழகம் முழுவதும் பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருப் பதாக தெரிவித்தார்.
அதன்படி கடந்த 18ம் தேதி வலது  காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு வலது காலில் எலும்பில் ஏற்பட்ட தொற்றுக்காக அறுவை சிகிச்சை மேற் கொண்டு தொற்று ஏற்பட்ட எலும்பை நீக்கினர்.

இது குறித்து கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் வெளியிட்ட அறிக்கை யில்,’ ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், மருத்து வர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பி யல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பா விற்கு காலில் சர்ஜரி வெற்றி கரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாக இருக்கிறார்.


அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ் விப்பார். அனைவரது அன்பிற் கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித் துக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் இன்று மதியம் வீடு திரும்பினார். மருத்துவ மனையிலிருந்து புறப்படும் முன் அவர் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், உதவியாக இருந்த நர்ஸ் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர்கள் கமலுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து பட்டினபாக்கத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். அங்கு அவரை குடும்பத்தினர் வரவேற்றனர். முன்னதாக கமல்ஹாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட விவரம் குறித்தும் டிஸ்சார்ஜ் ஆவது குறித்தும் மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.