கமல்ஹாசன் இன்றுமுதல் தேர்தல் சுற்றுப்பயணம்

4 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்..

13

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரு2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை ஏற்கனவே அறிவித்திருந்தார். தேர்தல் சுற்றுப் பயணத்தையும் பிரசராத்தையும் இன்று 13ம் தேதி முதல் தொடங்கி 16 வரை 4 நாட்கள் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சீரமைப்போம் தமிழகத்தை!! கமல் ஹாசன் முதலாம் கட்ட பிரச்சாரம் மதுரை & நெல்லை மண்டலத்தில் (டிசம்பர் 13 முதல் டிசம்பர் 16 வரை). 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கான முதற்கட்ட பயணத்தை நமது தலைவர் கமல் ஹாசன் இன்று ( டிசம்பர் 13 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ) மதுரையில் இருந்து துவங்குகிறார்  மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கமல்ஹாசன்.

இதனை  மக்கள் நீதி மய்யம். அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.