கிராம சபை கூட்டத்தில் நாளை பங்கேற்கும் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

0

அனைவருக்கும் வணக்கம்,
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறவேண்டிய கிராமசபைக் கூட்டம், அரசால் தடைசெய்யப் பட்டது. அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியும், தலைவர் ‘நம்மவர்’
கமல் ஹாசன்  அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, ‘கிராமசபைக் கூட்டம் நடத்தியே ஆகவேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத் தினர். அதன் எதிரொலி யாக, நாளை (02-10-2021) தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெற விருப்பதாக தமிழக அரசால் அறிவிக்கப்ப ட்டுள்ளது.
அதன்படி, நாளை திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், பாண்டேஸ் வரம் கிராமத்தில் நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டத்தில், காலை 11 மணியளவில் நம் தலைவர் ‘நம்மவர்’ கமல் ஹாசன்  கலந்து கொள்ள இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதனை மக்கள் நீதி மய்யம் ஊடக பிரிவு அறிவித்துள்ளது

 

Leave A Reply

Your email address will not be published.