மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு: தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம்

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என பேச்சு

16

2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியின் தேர்தல் பணிகளை தொடங்கினார்.

கடந்த மாதம் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. அதில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி

வைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது பற்றி முடிவை கட்சி தலைவர் கமல்ஹாசன் எடுக்க அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று மநீம கட்சியின் மாவட்ட செயலாளர்கள்  கூட்டம் சென்னையில் நடந்தது,. அதில் பேசிய கமல்ஹாசன்.’ திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

விரைவில் கமல்ஹாசன் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுர்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக சிவப்பு நிறத்தில் பிரசார வேன் தயார் செய்யப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.