மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மலேசிய மனிதவள அமைச்சரும், மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுடன் இணைய வழி நேரலையில் உரையாடினார்.
கொரோனா பெருந் தொற்றால் மலேசியாவில் வாழும் தமிழர்கள் சந்தித்து வரும் நெருக் கடிகள் பற்றி விவாதித் தார்.
கலந்துரையாடலில் அவர்களுக்கான உடனடி தேவைகள், மலேசியாவில் வாழும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்புவதில் இருக்கும் சிக்கல்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் சீரமைக்க தமிழக, இந்திய அரசுகளின் சார்பில் செய்ய வேண்டியவைகள் ஆகியவற்றைப் பற்றி உரையாடினார்கள்.
மலேசியாவிற்கு முறை யான அங்கீகாரம் இல்லாத நிறுவனங்கள் மூலம் வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தடுக்க, தமிழக அரசு மலேசியாவில் நம்பத் தகுந்த நிறுவனம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் வேலைவாய்ப்புகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்தபின், தமிழர்கள் வெளிநாடு களுக்குச் செல்வதை அனுமதிக்கலாம் என்று எம்.சரவணன் அவர்களின் ஆலோசனையை தமிழக அரசிடம் வலியுறுத்து வதாக தலைவர். கமல் ஹாசன் தெரிவித்தார்.
மலேசியாவில் பணி செய்து கொண்டிருக்கும் 67,395 தமிழர்களின் நலனுக்காக மனிதவள அமைச்சர் எம்.சரவணன் முன்வைத்த கோரிக் கைகள், பரிந்துரைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசிடமும் தெரிவிப்பதாகா கமல் ஹாசன் உறுதியளித்தார்.