கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை இன்று நடந்தது

ஸ்ருதி, அக்‌ஷரா தகவல்

16

மக்கள் நிதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தேர்தல் சுற்றுப் பயணம் முடிந்து சென்னை திரும்பினார். நேற்று வெளியிட்ட அறிக்கையில் தனக்கு காலில் அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக தெரிவித்தார். இன்று காலை கமலுக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை யில், மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாக இருக்கிறார்.
அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக் கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் மக்களை சந்திப்பார். மகிழ் விப்பார். அனைவரது அன்பிற் கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித் துக்கொள்கிறோம்.
இவ்வாறு ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் கூறி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.