கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை ..

அறிக்கையில் தகவல்

10

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார். இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் கமல்ஹாசன் கூறியிருப் பதாவது:
தமிழகத்தை தலை நிமிரச்‌ செய்ய ‘சீரமைப்போம்‌ தமிழகத்தை’ எனும்‌ முதல்‌ கட்ட தேர்தல்‌ பிரச்சாரத்தைப்‌ பூர்த்தி செய்திருக்கிறேன்‌. ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம்‌
கிலோமீட்டர்கள்‌ பயணித்து தமிழ்‌ மக்களைச்‌ சந்தித்திருக் கிறேன்‌. மாற்றத்திற்கான
மக்கள்‌ எழுச்சியை கண்ணாரக்‌ கண்டு திரும்பியிருக்கிறேன்‌.
அது போலவே, கொரானா பொது முடக்கத்தின்‌ போது துவங்கிய ‘பிக்பாஸ்‌ – சீசன்‌ 4’
தொலைக்காட்சி நிகழ்ச்சி யையும்‌ வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்‌. இதுவும்‌
மக்களுடனான பயணம்தான்‌. நான்கரை கோடி தமிழர் களோடு வாராவாரம்‌ உரை யாடியதும்‌, உறவாடியதும்‌ மகிழ்ச்சியூட்டுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர்‌ ஏற்பட்ட விபத்தில்‌ காலில்‌ ஒரு அறுவைச்‌ சிகிச்சை செய் திருந்தேன்‌. அதன்‌ தொடர்ச் சியாக, இன்னொரு சர்ஜரி (அறுவை சிகிச்சை) செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர் கள்‌ அறிவுறுத்தி இருந்தார்கள்‌. அதை மீறித்தான்‌.
சினிமா வேலைகளும்‌, அரசி யல்‌ சேவைகளும்‌ தொடர்ந் தன. பிரச்சாரத்தைத்‌ துவங்கும் போதே காலில்‌ நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின்‌ அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில்‌ ஒரு சிறு அறுவைச்‌ சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன்‌. சில நாட்கள்‌ ஓய்வுக்குப்‌பின்‌ மீண்டும்‌ என்‌ பணிகளைப்‌ புதிய விசை யுடன்‌ தொடர்வேன்‌.
மக்களை நேரில்‌ சந்திக்க இயலாது எனும்‌ மனக்குறை யை தொழில்நுட்பத்தின்‌
வாயிலாகப்‌ போக்கிக்கொள் ளலாம்‌. இந்த ‘மருத்துவ விடுப்பில்‌’ உங்களோடு இணையம்‌ வழியாகவும்‌, வீடியோக்கள்‌ வழியாகவும்‌ பேசுவேன்‌. மாற்றத்திற்கான நம்‌ உரையாடல்‌ இடையூறின்றி நிகழும்‌.
என்‌ மண்ணுக்கும்‌, மொழிக்கும்‌, மக்களுக்கும்‌ சிறு துன்பம்‌ என்றாலும்‌ என்‌ குரல்‌ எங்கும்‌ எப்போதும்‌ எதிரொலித்தபடிதான்‌ இருக்கும்‌. இப்போதும்‌ அது தொடரும்‌. ஒளி பரவட்டும்‌.
இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.