மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோயம்புத்தூரைச் சேர்ந்த எட்வின் என்பவருடன் zoom call மூலம் தொடர்பு கொண்டு, அவர் செய்து வரும் சேவைக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
எட்வின், 50 நாட்களைக் கடந்து அரசு மருத்துவ மனையில் ஆக்சிஜன் பேருந்து மூலம் சிகிச்சைக்குக் காத்திருப்ப வர்களுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்வது, அட்டெண்டர்களுக்கு சேர்த்து உணவுக்கு ஏற்பாடு செய்வது, ஆதரவற்றவர்களுக்கு இறுதிக் காரியங்கள் செய்வது என கொரோனா நோயாளிகளுக்கும் அவர்களின் உறவினர் களுக்கும் தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
இதையறிந்து கமல் ஹாசன், அவரை தொடர்பு கொண்டு சிறப்பான பணி மேலும் தொட ஊக்கமளித் தார்.