நீங்கள் தான் உண்மையான உலக நாயகர்கள்.

ஒலிம்பிக் வீரர்களுடன் கமல்ஹாசன் பேச்சு

1

“நீங்கள் தான் உண்மையான உலக நாயகர்கள்” டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடன் தலைவர் கமல்ஹாசன்  காணொளி காட்சி மூலம் உரையாடல்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர்.  கமல் ஹாசன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை காணொளி காட்சி மூலம் தொடர்புகொண்டு, அவர்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் தெரிவித் தார். தடகள வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் நேற்று (14.7.2021) கலந்துரையாடினார்.

“வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனை யாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான ‘உலக நாயகர்கள்’. நீங்கள்“ என்று அவர்களை பாராட்டிய அவர், இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர் கள் நீங்கள். ஒரு பெரிய பேரரசு கூட 500 வருடத் திற்கு மேல் கிடையாது. ஏழ்மையும் அப்படித்தான். ஒரு திறமைசாலி நினைத் தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும்.” என்றார்

மேலும், “இந்தியாவின் ‘தங்கச்சுரங்கம்’ நீங்கள், வெறும் தங்க பதக்கம் அல்ல. நீங்கள் கற்றவையை மற்றவர்  களுக்கு கற்றுத்தர வேண்டும். அது நீங்கள் செய்யவேண்டிய கடமை. போட்டியை நிதானமாக, பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள சுய மரியாதையை போலவே, உங்கள் விளையாட்டையும் மரியாதையுடன் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியுடன் திரும்பும்போது உங்களை பாராட்ட நாங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்.

செல்வி ரேவதி ,  கமல் ஹாசனனுடன் சில தினங்களுக்கு முன் தன்னுடன் பேசியதை நினைவுகூர்ந்து, “எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களை ஊக்குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா விற்கு பதக்கங்களை வெல்ல எங்கள் முழு முயற்சியை செலுத்து வோம்.” என்றார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.