கமலி ஃப்ரம் நடுக்காவேரி (பட விமர்சனம்)

66

படம்: கமலி ஃப்ரம் நடுக்காவேரி
நடிப்பு: கயல் ஆனந்தி, பிரதாப் போதன். இமான் அண்ணாச்சி, ரோஹித், அனிருத், கவி, அனீஷ், சிவன். வைத்தீஸ்வரி, நிவேதா ஸ்ரீஜா, ராஜேஷ்,
ஒளிப்பதிவு:லோகையன்
இசை:தீனதயாளன்
தயாரிப்பு: அபண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமி.
இயக்குனர்: ராஜசேகர் துரைசாமி

நடுக்காவேரி கிராமத்து பள்ளி மாணவி கயல் ஆனந்தி,  ஐஐடி மாணவர் ரோஹித் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதை கண்டு அவன் மீது  காதல் கொள்கிறார். எப்படியாவது  ஐஐடியில் சேர்ந்து ரோஹித்தை காதலிக்க எண்ணுகிறார். ஐஐடியில் சேர்வது  எளிதான விஷயம் இல்லை. கஷ்டமான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் முடியும் என்பதை அறிகிறார். அதற்காக  ஓய்வு பெற்ற பேராசிரியர்  பிரதாப்போதனிடன் கோச்சிங் சேர்கிறார்.  தீவிர பயிற்சிக்கு பிறகு நுழைவு தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் சேர்கிறார். ரோஹித்தை காதலிக்கும் எண்ணத்துடன் சென்ற ஆனந்தி படிப்பு கவனம் சிதறுகிறது. அவமானப்பட்டு  ஊர் திரும்பும் ஆனந்திக்கு பிரதாப்போத்தன்  தைரியம் சொல்ல  மீண்டும் ஐஐடிக்கு செல்கிறார் ஆனந்தி. அதன்பிறகு அவர் சாதனை பெண்ணாக எப்படி மாறுகிறார் என்பது கிளைமாக்ஸ்.

இதுவரை படங்களில் பார்த்த கயல் ஆனந்திக்கும் இப்படத்தில் கமலியாக நடித்திருக்கும் ஆனந்திக்கும்  ரொம்பவே வித்தியாசம் காட்டி இருக்கிறார்.முதல் சில காட்சிகளில் மவுன ராகம் ரேவதி போல் சுட்டித்தனம் செய்வதும் பிறகு படிப்பில் மூழ்கி ஆச்சர்யமூட்டுவதுமாக மாறுபட்டு நிற்கிறார்.

பிரதாப்போத்தனிடம் சின்சியராக ஐஐடி கோச்சிங் பெறும் ஆனந்தி நிஜ மாணவர்களுக்கும் உதாரணமாகி இருக்கிறார். ஐஐடியில் சேர்ந்தது அவர் ரோஹித் பின்னால் சுற்றும்போதே படிப்பில் தோல்வி அடைவார் என்று கணிக்க முடிகிறது. ஆனால் அதையே கடைசிவரை இழுக்காமல் மீண்டும் அவர் காதலை உதறிவிட்டு படிப்பில் சாதிப்பதுபோல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் ராசசேகர் துரைசாமி அப்ளாஸ் அள்ளுகிறார். வீணான காட்சிகள் இல்லாமல் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அதை போரடிக்காமல் சொல்லி இருப்பது பிளஸ். இப்படியொரு படம் வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த பெற்றோர்களுக்கு இப்படம் நிச்சயம் திருப்தி தரும்.

பல காட்சிகளில் ஆங்கில வசனம் கையாளப்பட்டிருக்கிறது அதற்கு தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாம். ஹீரோ ரோஷித் அமைதியாக நடித்து கவர்கிறார்.

கிளைமாக்ஸில் வரும் இண்டர் கல்லூரி குவிஸ் போட்டி செம த்ரில்லாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனந்தியும் பொறுப்பை உணர்ந்து நடித்திருப்பதுடன் தன்னை சிண்டிரில்லா என்று கிண்டல் செய்தவர்களை வாயடைக்கும் விதத்தில் அதே பதிலை சொல்லி குவிஸ் போட்டியை நிறைவு செய்வது கைதட்டல் பெறுகிறது.

இயக்குனர் ராஜசேகர் துரைசாமி முதல் படம் என்றாலும் எல்லோர் பாராட்டையும் பெறும் விதமாக தந்திருக்கும் ஸ்கிர்ப்டுக்கு விருது சிபாரிசில்லாமல் கிடைக்கும்
கமலி ஃப்ரம் நடுக்காவேரி- கிராமத்து மாணவரும் சாதிக்க கிடைத்த சூத்திரம்.

Leave A Reply

Your email address will not be published.