கங்கனா ரனாவத் ’தலைவி’ பட புதிய தோற்ற படங்கள் வெளியீடு

21

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது தலைவி. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இன்று ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் ஆகும். இதனை யொட்டி , கங்கனா ரனாவத் ‘தலைவி’ படத்திலி ருந்து சில புதிய ஸ்டில்களைப் பகிர்ந்துள்ளனர்.

படத்தின் புதிய ஸ்டில்களைப் பகிர்ந்த கங்கனா, “ஜெயலலிதா அம்மாவின் 4ம் ஆண்டு நினைவு நாளில், எங்கள் படமான தலைவி ஸ்டில்களைப் பகிர்ந்து கொள்கிறோம். எனது அணிக்கு, குறிப் பாக எங்கள் படகுழுவின் டைரக்டர் விஜய் படத்தை ஒரு வாரத்தில் முடிக்க ஒரு சூப்பர் மனிதனைப் போல செயல் பட்டுக்கொண்டிருக் கிறார்”


தலைவி படத்தில் அரவிந்த் சுவாமி அதிமுக தலைவர் எம்.ஜி.ஆராக நடிக்கிறார். படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளி யிடப்படும். இன்னும் ஒரு வாரத்தில் பட பணிகள் அனைத்தும் நிறைவாகும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளி யிட திட்டமிடப்பட் டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.