தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத் தின் பாடல்கள். டிரெய்லர் வெளியாகி வர்வேற்பை பெற்றது.
நாளை ஏப்ரல் (9ம் தேதி ) இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது. தியேட்டர்களில் 50சதவீத அனுமதி என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் திட்டமிட்டபடி கர்ணன் படம் நாளை வெளியாகும் என்று பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட் டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப் படும், #Karnan திரைப்படத் திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள் கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.