கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க தனுஷ் நடிக்கும் கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் – ரிலீஸ் தேதி.

81

கலைப்புலி எஸ்.தாணு  வி கிரியேஷன் சார்பில் தயாரிக்க  தனுஷ் நடிக்கும் படம் கர்ணன். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. அதில் தனுஷ் கைவிலங்குடன் காணப்படுகிறார், அவருக்கு பின்னால் மக்கள் திரண்டு நிற்கின்றனர்.

கர்ணன் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
நடிகர் தனுஷ் தனது சமூக ஊடக பக்கத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் பகிர்ந்து, “ கர்ணன் முதல் தோற்றம் மற்றும் தியேட்டர் வெளியீடு” என குறிப் பிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது,’ கர்ணன் படப்பிடிப்பு முடிந்தது. இதை எனக்கு வழங்கியதற்கு மாரி செல் வராஜுக்கு நன்றி. பட தயாரிப்பு நிறுவனம் வி கிரியேஷன் மற்றும் சக நட்சத்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்த சசிறப்பு படத்திற் காக சிறந்த இசை வழங்கி சந்தோஷ் நாரயாணனுக்கு ஒரு சிறப்பு நன்றி ’ என குறிப்பிட்டார்.

இயக்குனர் மாரி செல்வ ராஜும் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து கொண்டார். அதில், ” நீதிக்கான ஆத்மா ஒருபோதும் இறக்கவில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் கர்ணன்’ என தெரிவித்திருக்கிறார்.
கர்ணன் படத்தில் ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா சந்திர மவுலி, நடராஜன் சுப்பிரமணி யன், யோகி பாபு, அழகம் பெருமாள், லால் மற்றும் கவுரி ஜி கிஷன் ஆகியோர் நடிக்கின் றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

Dhanush and Mari Selvaraj’s Karnan first look out

Leave A Reply

Your email address will not be published.