கசட தபற (திரைப்பட விமர்சனம்)

1

படம்: கசட தபற

நடிப்பு: வெங்கட் பிரபு, பிரேம்ஜி,  சந்தீப் கிஷன், ஹரிஸ் கல்யாண், சாந்தனு, டி.சிவா,  ரெஜினா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, சிஜா ரோஸ்,  பெஞ்சமின்,  பஞ்சு சுப்பு, சம்பத், ஜெயபிரகாஷ், சங்கிலி முருகன்,  யூகி சேது,

தயாரிப்பு: பிளாக் டிக்கெட் கம்பெனி வெங்கட் பிரபு,

ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன்,  பாலசுப்ரமணியம்,  ஆர்.டி.ராஜசேகர்,  ஷக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர்

இசை: யுவன் ஷ்ங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன்,  ஜிப்ரான், பிரேம்ஜி, சாம் சி எஸ். ,சீன் ரோ டன்

இயக்கம்: சிம்பு தேவன்

ரீலீஸ்: சோனி லைவ்

அந்தலாஜி பாணிபோல் ஹைப்பர் லிங்க் என்ற பாணியில் உருவாகி யுள்ளது கசட தபற.. மொத்தம் 6 கதைகளை உள்ளடக்கியதென்றாலும் எல்லா சம்பவங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது என்பது கிளைமாசில் தெரிய வருகிறது. முதல் கதை யாக தனி அறையில் தங்கி வேலைக்கு சென்று வரும் பிரேம்ஜி சம்பவமாக தொடங்குகிறது. பிரேம்ஜிக்கு குடும்ப வாழ்க்கை நடத்த சொல்கிறார் கூடவே இருக்கும் கடவுள் . பிரேம்ஜியின் நல்ல குணங்களை கண்டு அவர் மீது காதல் கொள்கிறார் ரெஜினா. தந்தை தெரிவிக்கும் எதிர்ப்பால் நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வருகிறார் ரெஜினா. அந்த நகையை தூக்கிக் கொண்டு பிரேம்ஜி ஓட்டிவிட்டதாக போலீசில் புகார் தரப்படுகிறது. அடுத்து சாந்தனு கதை தொடங்குகிறது. ரவுடி தந்தை சம்பத்தின் மகனாக இருந்தும் வெளிநாடு சென்று செட்டிலாக ஏற்பாடு செய்யப்படுகிறது. திடீரென்று சம்பத்தை போலீஸ் என்கவுன்ட்டர் செய்கிறது. அடுத்து சந்தீப் கிஷன் கதை தொடங்க,  அவர் என்கவுன்ட்டர் நடத்த உயர் அதிகாரியால் தூண்டப்படுகிறார். இந்நிலையில் அவர்து குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து ஹரிஸ் கல்யாணின் பண ஆசை எபிசோட் .

பிறகு விஜயலட்சுமி, வெங்கட் பிரபு வாழ்க்கை கதைகள் தொடர்கின்றன. தவறாக பழி சுமத்தி வெங்கட் பிரபு தூக்கு மேடைக்கு அனுப்பப்படு கிறார். அவரது கதி எண்ணவாகிறது என்ற திருப்பத்துடன் கிளைமாக்ஸ் முடிகிறது.

இவ்வளவு சமாச்சாரங் களை உள்ளடக்கிய கதையாக கசட தபற படத்தை இயக்கி இருக்கி றார் சிம்புதேவன்.

ஏதோ ஆறு கதைகளை எடுத்தோம் என்றில்லாமல் எல்லாவற்றையும் வாழ்க் கையோடு தொடர்புப் படுத்தி  இருப்பது படத் துக்கு வலு சேர்க்கிறது. வழக்கமாக  ஜோக் அடித்துக்கொண்டு காமெடியனாக வரும் பிரேம்ஜிக்கு பொறுப்பான ஒரு வேடத்தை கொடுத்து அவரிடம் நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர்.

பிரேம்ஜிக்கு ஜோடியாக வருகிறார் ரெஜினா. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சந்தீப் கிஷன் வேடத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். தனக்கு பிடிக்காத என்கவுன்டடர் வேலையை தன் மீது திணிக்கும் உயர் அதிகாரி சுப்பு பஞ்சு மீது கோபம் கொண்டாலும் அதை வெளிபடுத்த முடியாமல் தவிப்பது, மனைவியிடமும் கோபத்தை சம்பாதித்துக் கொள்வது என நடிப்பில் உருகுகிறார்.

ஹரிஷ் கல்யாண்  நரி தந்திர வேலைகளை செய்து அதில் அவருக்கே தெரியாமல் சிக்குவது பரிதாபம்.

இந்த எல்லா கதை களையும் மிஞ்சி விடுகிறது வெங்கட்பிரபு, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி வாழ்க்கை கதை. அதுவும் வெங்கட் பிரபுவின் தூக்கு நாள் நெருங்க நெருங்க மனதில் சோகம் திரண்டு நிற்கிறது.

இப்படத்தின் ஒவ்வொரு எபோசோடுக்கும் வெவ்வேறு தொழில்நுட்ப வல்லுணர்கள் பணியாற்றியிருப்பது ஹைலைட்..

வெங்கட்பிரபு தயாரித்தி ருக்கிறார். அருமையான இப்படியொரு படம் இயக்கி அளித்த  இயக்குனர் சிம்பு தேவனுக்கு   தாராளமாக கைதட்டலை  தரலாம்.

கசட தபற- அன்றாட வாழ்வியல்.

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.