கதிர் – விமர்சனம்!

1

டிப்பு: வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிகா

தயாரிப்பு: தினேஷ் பழனிவேல்

இசை: பிரசாந்த் பிள்ளை

ஒளிப்பதிவு: ஜெயந்த் சேதுமாதவன்

இயக்கம்: தினேஷ் பழனிவேல்

சமீபகாலமாக சினிமாவில் அல்லோகலப்படும் இன்ஜினியரிங் படித்துவிட்டு வழக்கம் போல் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ வெங்கடேஷ் வழக்கம் போல் சென்னையில் தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார். ஆங்கிலத்தில் தடுமாறும் இவர் வேலை கிடைக்காமல், தண்ணியடித்துவிட்டு சுற்றித் திரிகிறார். இதைக் கண்டு இவர் தங்கி இருக்கும் வீட்டு ஓனர் ரஜினி சாண்டி ஹீரோவிற்கு புத்திமதி சொல்லி திருத்தி தலை நிமிர வைக்கிறார் என்பதே இதன் ஒன்லைன். தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் சாதாரண கதையை ஒரு நல்ல பீல் குட் மூவியாக தர முயற்சித்துள்ளனர் கதிர் படக்குழுவினர்.

ஹீரோவாக வரும் வெங்கடேஷ், வீட்டு ஓனராக நடித்திருக்கும் ரஜினி சாண்டி மற்றும் நாயகனின் நண்பர்கள் என பலரும் இதற்கு முன்பு சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து அனுபவம் கொண்டவர்கள் என்றாலும் ,இதில் தங்களுடைய நடிப்பில் குறை ஏதுமின்றி அற்புதமாக நடித்துள்ளனர். நாயகியாக நடித்திருக்கும் புதுமுக நடிகை பாவ்யா ட்ரிகா தன்னுடைய அழகிலும் நடிப்பிலும் அசத்தியுள்ளார். பாவ்யா ட்ரிகா தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு.

படத்தின் இரண்டாவது பாதிக்கு மேல் சிறப்பு காட்சியில் தோன்றும் நடிகர் சந்தோஷ் பிரதாப், ஒரு புரட்சியாளனாக தன்னுடைய நடிப்பில் அசத்தியுள்ளார். ஹீரோவின் நண்பர்களாக வரும் ஒவ்வொரு வரும் சிறப்பாகவே நடித்துள்ளனர். குறிப்பாக காலேஜில் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளுமே ரசிக்கும்படியாக உள்ளது, பல இடங்களில் சிரிப்பலை களை ஏற்படுத்துகிறது. ஹீரோ வெங்கடேஷ்க்கு அடுத்து படத்தை தாங்கி பிடிப்பவர் ரஜினி சாண்டி தான். தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் அந்த கதாபாத்திரத்தில் நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறார். நம்மளுக்கு இப்படி ஒரு ஹவுஸ் ஓனர் இல்லையே என்ற ஏக்கம் வரும் அளவிற்க்கு நடித்து இருக்கிறார் ரஜினி. கதாநாயகியாக வரும் பாவ்ய ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார்.

கார்த்திக் மேத்தா மற்றும் உமா தேவியின் பாடல் வரிகளில் பிரஷாந்த் பிள்ளையின் இசை மற்றும் ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு வலு சேர்த்துள்ளது. தினேஷ் பழனிவேலின் கதை, திரைக்கதை, வசனத்திலும், அவருடைய இயக்கத்திலும் உருவாகியுள்ள இப்படம் பார்வையாளர்களுக்கு கருத்து சொல்லுவது மட்டுமின்றி, பார்வையாளர்கள் ரசித்து பார்க்கும்படி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் எங்கும் ஆபாச காட்சிகளோ, அல்லது இரட்டை அர்த்த வசனங்களோ இல்லை என்பது பாராட்டுதலுக்குரியது.

அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழத் தக்க படம்.

Leave A Reply

Your email address will not be published.