விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜயசேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ரெண்டு காதல் என்ற சிங்கிள் பாடலை பிப்ரவரி14-ந்தேதி காதலர் தினத்தன்று வெளியிட்டனர். அது ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் இன்னொரு பாடலை ஜூலை மாதத்தில் வெளியிட இருப்பதாக இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.