கட்டம் சொல்லுது (திரைப்பட விமர்சனம்)

7

படம்: கட்டம் சொல்லுது
நடிப்பு: தீபா சங்கர், எஸ்.ஜி.எழிலன், டி.திடியன், சு.சின்னதுரை. சகுந்தலா, ராஜா அய்யப்பன், ஜே.சபரிஸ், மணிவாசகன், வீரமணி, வி.ராணிஜெயா

இசை: தமீம் அன்சாரி

ஒளிப்பதிவு:ஜே.சபரிஷ்

தயாரிப்பு: கண்ணா கணேசன்

இயக்கம்:எஸ்.ஜி.எழிலன்

மகளுக்கு 6 மாதத்துக்குள் திருமணம் நடக்காவிட்டால் காலத்துக்கும் திருமணம் நடக்காது என்று குறி சொல்லும் கிழவி சொன்னதைக் கேட்டு மகளுக்கு அவசரமாக மாப்பிள்ளை தேடுகிறார் தீபா சங்கர். மாப்பிள்ளை ஜாதகங்களுடன் ஜோதிடம் பார்க்கச் சென்ற இடத்தில் அங்கிருக்கும் நபரான திடியனிடம் நைசாக பேச்சு கொடுத்து அவர் மூலம் மாப்பிளையை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணுகிறார். திடியனிடம் அவரது நண்பர்களின் கதையை விசாரித்து அதில் யார் தன் மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை என்று காண முயற்சிக்கிறார். அவரால் மாப்பிள்ளையை கண்டு பிடிக்க முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

ஜோதிடத்தை மையமாக வைத்து கலகலப்பான ஸ்கிரிப்பட்டாக கட்டம் சொல்லுது படத்தை இயக்கி இருக்கி றார் எஸ்.ஜி.எழிலன் இவரே ஹீரோவாகவும் நடித்தும் இருக்கிறார்.

ரொம்பவே எதார்த்தமான சம்பவங்களை கோர்த்து கதையை அமைத்திருப்பதால் வரும் எல்லா காட்சிகளும் நான் ஸ்டாப் காமெடியாக தெறிக்கிறது.

தன்னைப்பற்றி யாரோ தன் தந்தையிடம் போட்டுக்கொடுத்து அடி வாங்கி வைப்பதை எண்ணி நொந்துபோகும் எழிலன், யார் அந்த கோள்மூட்டி என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

ஜோதிடம் பார்க்க வரும் தீபாவும் அங்கிருக்கும் நபர் திடியனுக்கு ஓசி கூல்டிரிங்க்ஸ் வாங்கி கொடுத்துவிட்டு அவரது நண்பர்களை பற்றிய கதை சொல்லச்சொல்லி கேட்டு அவரை விடாமல் தொந்தரவு செய்வதும் அவரிடம் சிக்கிக்கொண்டு திடியன் திணறுவதும் பலே போட வைக்கிறது.

தீபா எப்பவும் கொஞ்சம் ஓவராக நடிப்பார் ஆனால் இதில் அவருக்கு இயக்குனர் கொஞ்சம் கட்டு போட்டுவிட்டிருப்பதால் அளவுடன் அப்பாவித்தனமாக பேசி கலகலப்பூட்டுகிறார்.

எழிலன் தந்தையாக வரும் போலீஸ் காரர் சின்னத்துரை, தாயாக நடித்திருக்கும் சகுந்தாலாவும் சக பாத்திரங்களாக மாறி வாழ்ந்த்திருக் கின்றனர்.

காட்சிகளை நீட்டி முழக்காமல் ஆங்காங்கே கதையின் போக்கில் மாற்றங்கள் செய்து ரசிகர்களை இருக்கையில் சிரித்தமுகத்துடன் கட்டிபோட்டுவிடுகிறார் இயக்குனர் எஸ்.ஜி.எழிலன்.

ஒளிப்பதிவாளர் ஜே. சபரிஷ், இசை அமைப்பாளர் தமீன் அன்சாரி ஆகியோரின் பங்கும் கதைக்கு கைகொடுக்கிறது.

கட்டம் சொல்லுது- நகைச்சுவை பேக்கேஜ்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.