காவியத் தலைமகன் கவியரசு என்ற காலப்பெட்டகம்

மறந்தால் தானே நினைப்பதற்கு..

36

தமிழ்திரையுலகில் இதுவரை எத்தனையோ கவிஞர்கள் வந்தார்கள். போனார்கள் ஆனால் வந்தவர்களில் காலத்தால் அழிக்கமுடியாமல் நின்றவர்கள் ஒரு சிலரே. அதில் முதலிடத்தை தமிழ் உள்ளளவும், தமிழ் சினிமா உள்ளளவும் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் கவியரசு கண்ணதாசன்.


கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் சாத்தப்பன் செட்டியார், தாயார் விசாலாட்சி ஆச்சி.
இயற்பெயரை மறக்கடித்து தனக்கென ஒரு பெயரை உருவாகியவர் கண்ணதாசன். அந்த பெயரை கேட்டாலே தமிழ் எழுந்து வணங்கும் சரஸ்வதி அவரது நாவிலும், எழுதுகோள்முனையிலும் விழித்திருப்பாள். யாருக்கு எப்படி பாடல் எழுத வேண்டும் என்று அவருக்கு ஒரு கணக்கு உண்டு புரட்சி தலைவர் என்றால் அவருக்கு தத்துவ பாடல், நடிகர் திலகம் என்றால் அவருக்கு நெஞ்சுருகும் குடும்ப பாடல், பிற நடிகர்கள் என்றால் அவர்களின் கதாபாத் திரத் துக்கு ஏற்ப பாடல்கள் அருவி யாய் கொட்டும்.
இசை அமைப்பாளர் வந்தால் நீ மெட்டை போடு என்பார் மெட்டை முடிப்பதற்குள் பாட்டை பிடி என்று கையில் பாடலை கொடுத்துவிடுவார். இவர் நவீன காலத்துக்கு கம்பன். இவரைபோல் பாடல் எழுதுகிறேன் என்று பல பேர் வந்தார்கள் அப்படி வந்தவர் கள் எல்லாம் வந்த வழியே திரும்பினார்கள்.


கண்ணதாசன் முன் எல்லோரு மே ஒன்றுதான் அங்கு அவர் தான் ராஜா. அவர் தொடத தத்துவம் கிடையாது, பாடல் கள் மட்டுமல்ல அவரது படைப்புக்களை சொன்னால் பெரு மூளையும், சிறு மூளை யும் இடம் கொள்ளாது. சினிமாவுக்கு அவர் ஆற்றிய தொண்டு இனியாராலும் செய்துவிட முடியாது.

 


ஐயாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருந்திய கவியரசு கதை எழுதிய திரைப்படங்கள், வசனம் எழுதிய திரைப் படங்கள்
நாடோடி மன்னன் (1958)
கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்
மதுரை வீரன் 1956
நானே ராஜா 1956
ராஜா தேசிங்கு
மகாதேவி|(1957)
மாலையிட்ட மங்கை(1958)
கருப்புப் பணம்(1964)
தெனாலி ராமன்(1957)
தெய்வத் திருமணங்கள்
மன்னாதி மன்னன்(1960)
திருடாதே “(1961)
ராணி சம்யுக்தா “(1962)
இல்லற ஜோதி(1954)
பாரதியின் இன்னொரு தாசன்:
மகாகவி பாரதியின் இன்னொரு பாரதி தாசன் கவியரசு கண்ணதாசன்.
இந்த மகாகவி தாசன் சினிமாவுக்கு அப்பாற்பட்டு படைத்த இலக்கியங்கள் எண்ணிலடங்காது.
ஒரு துளியில் சிறுதுளி இலக்கியப் படைப்புகள் காண்போமா..

காப்பியங்கள்:
ஆட்டனத்தி ஆதிமந்தி
இயேசு காவியம்
ஐங்குறுங்காப்பியம்
கல்லக்குடி மகா காவியம்
கிழவன் சேதுபதி
பாண்டிமாதேவி
பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை – 14.
மலர்கள்
மாங்கனி
முற்றுப்பெறாத காவியங்கள்
கவியரசின் தொகுப்புகள்:
கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
பாடிக்கொடுத்த மங்களங்கள்
கவியரசின் சிற்றிலக்கியங்கள்:
அம்பிகை அழகுதரிசனம்
கிருஷ்ண அந்தாதி
கிருஷ்ண கானம்
கிருஷ்ண மணிமாலை
ஸ்ரீகிருஷ்ண கவசம்
ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
தைப்பாவை
கவிதை நாடகம்
கவிதாஞ்சலி
மொழிபெயர்ப்பு
பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்)
பஜகோவிந்தம்
கவியரசின் புதினங்கள்:
அவளுக்காக ஒரு பாடல்
அவள் ஒரு இந்துப் பெண்
அரங்கமும் அந்தரங்கமும்
அதைவிட ரகசியம்
ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை)
ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை.
ஊமையன்கோட்டை
ஒரு கவிஞனின் கதை
கடல் கொண்ட தென்னாடு
காமினி காஞ்சனா
சரசுவின் செளந்தர்ய லஹரி
சிவப்புக்கல் மூக்குத்தி
சிங்காரி பார்த்த சென்னை
சுருதி சேராத ராகங்கள்
சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது)
தெய்வத் திருமணங்கள்
நடந்த கதை
பாரிமலைக்கொடி
பிருந்தாவனம்
மிசா
முப்பது நாளும் பவுர்ணமி
ரத்த புஷ்பங்கள்
விளக்கு மட்டுமா சிவப்பு
வேலங்குடித் திருவிழா
ஸ்வர்ண சரஸ்வதி
சிறுகதைகள்
ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை.
ஒரு நதியின் கதை
கண்ணதாசன் கதைகள்
காதல் பலவிதம் – காதலிகள் பலரகம்
குட்டிக்கதைகள்
பேனா நாட்டியம்
மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை)
செண்பகத்தம்மன் கதை
செய்திக்கதைகள்
தர்மரின் வனவாசம்
தன்வரலாறு
எனது வசந்த காலங்கள்
வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை)
எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்)
மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை)
எனது சுயசரிதம்

அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
இலக்கியத்தில் காதல், 1956, அருணோதயம், சென்னை.
இலக்கிய யுத்தங்கள்
எண்ணங்கள் 1000
கடைசிப்பக்கம்
கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை
கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள்
கூட்டுக்குரல்; அருணோதயம், சென்னை.
குடும்பசுகம்
சந்தித்தேன் சிந்தித்தேன்
சுகமான சிந்தனைகள்
செப்புமொழிகள்
ஞானமாலிகா
தமிழர் திருமணமும் தாலியும், 1956, அருணோதயம், சென்னை.
தென்றல் கட்டுரைகள்
தெய்வதரிசனம்
தோட்டத்து மலர்கள்
நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை)
நான் பார்த்த அரசியல் – முன்பாதி
நான் பார்த்த அரசியல் (பின்பாதி)
நான் ரசித்த வர்ணனைகள்
புஷ்பமாலிகா
போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை
மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை)
ராகமாலிகா
வாழ்க்கை என்னும் சோலையிலே
கவியரசின் சமயம்:
அர்த்தமுள்ள இத்து மதம் 1 :
அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்
நாடகங்கள்
அனார்கலி
சிவகங்கைச்சீமை
ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.
கவியரசின் உரை நூல்கள்:
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம்
ஆண்டாள் திருப்பாவை
ஞானரஸமும் காமரஸமும்
சங்கர பொக்கிஷம்
சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது
திருக்குறள் காமத்துப்பால்
பகவத் கீதை.
கவிதை நாடகம்
கவிதாஞ்சலி
என்றென்றும் கண்ணதாசன் நினைவு:
கவியரசு கண்ணதாசன் உடல்நலக் குறைவு காரண மாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் தகனம் நடந்தது.
3 முதல்வர்கள் அமைத்த மணிமண்டபம்:
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகை யில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[9] அமைத் துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநி தி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெய லலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப் பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப் பட்டுள்ளது.
கவியரசு நினைவு நாள் அக்டோபார் 17ம் . ஆனால் அவரை மறந்தால் தானே நினைப்பதற்கு ஒவ்வொரு நாளும் அவரின் பாடல் சுழலாத நாளே கிடையாது. திரையுலகில் எங்கோ ஒரு இடத்தில் அவரின் புகழ் பேசப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.