நித்தின் நடிக்கும் தெலுங்கு படம் ரங் தே. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, வெங்கி அல்லூரி இயக்குகிறார். இதில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்க்கு சொந்த குரலில் பாட ஆசை. இதை அறிந்த இப்படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு வரவழைத்து, கீர்த்தியின் குரலை பரிசோதித்தார். தற்போது அந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் வைரல் ஆகியுள்ளது. ஏற்கனவே வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்ட கீர்த்தி, முறைப்படி இசையை கற்று வருகிறார். இந்த படத்தில் அவர் பாடகியாக மாற உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது