தமிழுக்கு வரும் கிக் பாக்ஸிங் நடிகை

ஸ்ரீகாந்த்தின் மிருகா படத்தில் அறிமுகமாகிறார்

18

ஜாகுவார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிக்கும் மிருகா திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் நாய்ரா ஷா. இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். நாய்ரா ஷா தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். அவருக்கு குங்-ஃபூ கூட தெரியும்.
தெலுங்குப் படங்களில் நடித்து வந்த இவர் மிருகா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இளமையும், குறும்பும் பொங்கும் தன் அழகால் ரசிகர்களை அவர் வசம் இழுக்கப் போவது உறுதி. புலியிடமிருந்து தன் சகோதரி மகளைக் காப்பாற்றப் போராடும் காட்சி… நாய்ரா ஷாவின் நடிப்புத் திறமைக்கு சாட்சி…


எவ்வளவு ஆபத்தான காட்சியிலும் நாய்ரா ஷா டூப் போடாமல் துணிச்சலாக நடித்தார். பத்தடி உயரத்தில் இருந்து வெறும் தரையில் குதித்தார். கால் தடுமாறி மாடிப்படிகளில் உருளும் காட்சியில் படத்தொகுப்புக்காக வெவ்வேறு கோணங்களில் பல ஷாட்கள் எடுக்கப்பட்டன. சிறிதும் முகம் சுளிக்காமல் தன் வலியை மறைத்தபடி நாய்ரா பலமுறை படிகளில் உருண்டது வியப்புக்குரிய விஷயம்.

பாசமான தங்கை, அன்பான சித்தி, துள்ளலான மைத்துனி, குறும்பான காதலி… என எல்லாப் பரிமாணங்களிலும் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார் நாய்ரா ஷா…
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், ராய் லக்‌ஷ்மி, தேவ் கில், நாய்ரா ஷா,
வைஷ்ணவி சந்திரன் மேனன், பிளாக் பாண்டி…
பி.வினோத் ஜெயின் – ஜாகுவார் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. கிரியேட்டிவ் புரட்யூசர் : M.நரேஷ் ஜெயின்.
இசை :அருள்தேவ். கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு : எம்.வி.பன்னீர்செல்வம். இயக்கம் ஜே.பார்த்திபன்,

Leave A Reply

Your email address will not be published.