களத்தில் சந்திப்போம் (பட விமர்சனம்)

31

படம்:களத்தில் சந்திபோம்
நடிப்பு: ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ராதா ரவி, ரோபோ சங்கர், இளவரசு, பால சரவணன், ரேணுகா, வேல ராமமூர்த்தி
தயாரிப்பு: சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி (90வது படம்)
ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்
இசை: யுவன்சங்கர் ராஜா
இயக்கம்: ராஜசேகர்

காரைக்கடியில் ஜீவா, அருள்நிதி பிரிக்க முடியாத நண்பர்கள். ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் கபடி போட்டி களத்தில் எதிர் எதிர் அணியாக மோதுகின்றனர். அருள்நிதிக்கு அவரது அம்மா தனது அண்ணன் மகளை திருமணம் செய்துவைக்க சம்பந்தம் பேச செல்கிறார். நண்பனுக்காக பெண் பார்க்க ஜீவா செல்கிறார். ஆனால் எப்போதோ ஜீவா தமாஷாக அருள்நிதிபற்றி பேசிய பேச்சை காரணமாக வைத்து அந்த வீட்டு மூத்த மருமகன் நிச்சயதார்த்தை நிறுத்துகிறார். நின்றுபோன திருமணத்தை நடத்த பாடாதபாடுபட்டு மஞ்சுமாவை கோவிலுக்கு அழைத்து வந்து அவரது கழுத்தில் அருள்நிதியை தாலி கட்டச் சொல்கிறார். அவரோ மணக்க முடியாது என்று மறுத்து விடுகிறார். ஜீவாவால் தனது திருமணம் நின்று போனதால் அவரையே மணக்க முடிவு செய்கிறார் மஞ்சிமா. அதை ஜீவா ஏற்க மறுக்கிறார். அருள்நிதி மஞ்சிமாவை மணக்க மறுத்தது ஏன்? மஞ்சிமாவின் காதலை ஜீவா ஏற்கிறாரா என்பதற்கு களத்தில் சந்திப் போம் விடை சொல்கிறது.

ஜீவா, அருள்நிதி முதன்முறை இணைந்திருப்பது கதைக்கு புது மெருகு தந்திருக்கிறது. ஜீவாவை எப்போதும் விட்டுக் கொடுக்காமல் பேசும் அருள்நிதி ஜீவாவை தாக்க வந்த ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து அசத்துகிறார்.


அருள்நிதிக்காக பெண் பார்க்கச் செல்லும் ஜீவா தனது பேச்சால் அந்த திருமணம் தடைபடுகிறது என்பதை அறிந்து நொந்து நூடுல்ஸ் ஆகிறார். எப்படியாவது மஞ்சிமாவை அருள்நிதியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று மஞ்சிமாவை பேசி பேசியே அருள்நிதியுடன் திருமணம் செய்ய சம்மதிக்க வைப்பது கலகலப்பு.
மஞ்சிமாவுக்கு குடும்பத்தினர் வேறு திருமணம் ஏற்பாடு செய்வதை அறிந்து அங்கி ருந்து மஞ்சிமாவை ஜீவா அழைத்துக்கொண்டு கோவி லுக்கு வருவதும் அருள்நிதி யை தாலி கட்டச் சொல்லி கேட்க அவர் முடியாது என்று மறுப்பதும் எதிர்பாராத திருப்பம்.
அருள்நிதி-பிரியா பவானி சங்கரின் காதல் பிளாஷ்பேக் மற்றொரு குட்டி கதை. அருள்நிதி பிரியா பவானி சங்கரின் குடும்பத்தை ஜீவாவின் தந்தைக்காக அடிப்பதும் அதனால் பிரியா பவானியின் காதல் முறிவதும் அழுத்தமாக சொல்லப்படு வதில் அர்த்தமுள்ளது.
உன்னால என் வாழ்க்கையே போச்சு, நீதான் என்னை கல்யானம் செய்துக்க வேண்டும் என்று மஞ்சிமா ஜீவாவிடம் மல்லுகட்டுவதும் அவரைப்பின் தொடர்ந்து சென்று காதல் துரத்தல் நடத்துவம் கலகல காதல் காட்சிகளாக அமைகிறது.
சண்டை காட்சிகளில் ஜீவா, அருள்நிதி இருவரும் சளைத்த வர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ’அவன் அடிக்கும்போது பாத்துகிட்டி ருப்பேன் அவனை அடிச்சா நான் அடிப்பேன்’ என்று ஜீவா பேசும் பஞ்ச் கலக்கல்.
மலை உச்சிக்கு சென்று ஜீவா விடம் அருள்நிதியை வேறு திருமணம் செய்துக்கொள்ளச் சொல்வதும் அதற்கு அருள்நிதி வேறு ஒரு பெண்னை என்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்ல உனக்கு உரிமை இல்லை என்று பிரியா மீதான காதல் வெளிப்படுத்துவது உருக்கம்.
ரோபோ சங்கர், பாலா சரவணன் சிரிக்க வைக்க்கின் றனர். ராதா ரவி குணசித்ர நடிப்பில் மிளிர்கிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸின் ஆர்.பி.சவுத்ரியின் 90வது படமாக இது தயாராகி இருக்கிறது. ராஜசேகர் எல்லா அம்சங்களும் கலந்த ஸ்கிர்ப்ட்டாக உருவாக்க மெனக்கெட்டிருக்கிறார் அது எதிர்பார்த்த பலனை தந்திருக் கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் திரைக்கதை ஓட்டமும் விறுவிறுப்பாக செல்கிறது. ஒளிப்பதிவு கூடுதல் பலம்
களத்தில் சந்திபோம்: ஃபுல்மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி.

Leave A Reply

Your email address will not be published.