ஜீவா நடிக்கும் ‘கொம்பு’ பட ஆடியோ வெளியீடு..

தமிழருவி மணியன் வாழ்த்து..

505

ஜீவா, திஷா பண்டே நடித்தி ருக்கும் படம் கொம்பு. இப்படத்தை இப்ராகிம் இயக்கி உள்ளார். பன்னீர் செல்வம் தயாரித்திருக்கிறார்.
இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்துகொண்டு வாழ்த்தினார், அவர் ககூறிதாவது:


நான் அதிகம் சினிமா விழாக் களில் கலந்து கொண்டதில் லை 50 வருடத்தில் இரண்டு சினிமா விழாவில்தான் கலந்துகொண்டிருக்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும் போதே காந்தியின் சத்திய சோதனை படித்து அதன்படி என் வாழ்க்கை நெறியை அமைத்துக்கொண்டேன். காமராஜரை என் நெஞ்சில் வைத்து வணங்குகிறேன். என் தந்தைக்கு இரண்டு வீடுகள் இருந்தன. அதனை விற்றுத் தான் என் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். நான் இன்றும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கி றேன். அது ஒருபக்கம் இருக் கட்டும். நான் இந்த கொம்பு பட விழாவுக்கு வந்ததற்கு காரணம் நடிகர் ஜீவாதான். அவர் எனது நண்பர். என்னைப்போவே காமரா ஜரை நேசிப்பவர். ரஜினியை எந்நேரமும் மனதில் வைத்தி ருப்பவர். அதனால்தான் அவரது பேச்சு, உடல்மொழி யெல்லாம் ரஜினிபோலவே இருக்கிறது. இவர் சிறுபட் ஜெட் படங்களின் சின்ன ரஜினி. ஜீவா திரையுலகில் இன்னும் பெரிதாக வளர வாழ்த்துகிறேன். இப்பட்டத்தின் இசை, ஒளிப்பதிவு எல்லாமே மிகவும் அருமையாக உள்ளது. இது கருத்துள்ள படம் என சொல்ல வரவில்லை. ஆனால் பொழுதுபோக்கு படம். மக்கள் இன்னலில் சிக்கி தவிக்கும் நிலையில் இதுபோன்ற படங்கள் வர வேண்டும்.
திரையுலக விழாக்களுக்கு பிரபல நட்சத்திரங்கள் வர வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி ஒதுங்கக் கூடாது. அப்போதுதான் தியேட்டருக்கு ரசிகர்கள் தைரியமாக வருவார்கள்.
இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் விஜயமுரளி, சவுந்தர், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் . நடிகர் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.