பிரபல பாடகர் கே.கே காலமானார்!

0

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார்.இந்தியாவில் பல்வேறு மொழிகளில் பாடி ஹிட் கொடுத்த முக்கிய பாடகர்களில் ஒருவரான இவர் மின்சார கனவு படத்தில் இடம் பெறும் ஸ்ட்ராபெரி கண்ணே பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பின்னாளில் இவர் பாடிய ஹிட் தமிழ் பாடல்கள் 7ஜி ரெயின்போ காலனி (நினைத்து நினைத்து பார்த்தேன்), கில்லி (அப்படி போடு), ரெட் (ஒல்லிக்குச்சி உடம்புக்காரி), காக்க காக்க (உயிரின் உயிரே) உள்ளிட்ட பல பாடங்களில் ஹிட் பாடல்களை கேகே பாடி உள்ளார்.

இது மட்டுமின்றி கன்னடம், மலையாளம், பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் இவர் பாடல்களைப் பாடியுள்ளார்.1999 உலகக்கோப்பைப் போட்டிகளுக்காக இந்திய அணிக்காக ‘’ஜோஸ் ஆஃப் இஃதியா’’ எனும் உற்சாகமூட்டும் பாடலைப் பாடினார்.

இவரின் குழந்தை பருவ தோழியான ‘’ஜோதி’’ என்பவருடன் 1991 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு ‘’நகுல் கிருஷ்ணா குன்னத்’’ (Nakul Krishna Kunnath) எனும் மகனும் ‘’தாமரா குன்னத்’’ (Tamara Kunnath) எனும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கேகே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து கே.கே-வின் மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் அஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.