கே. எஸ். கோபால கிருஷ்ணன் 1950ஆம் ஆண்டுகளில் திரையு லகில் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பின்னர் 1960ஆம் ஆண்டுகள் துவங்கி 1980ஆம் ஆண்டும் வரையிலும் வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார்.
தற்போதைய நாகப் பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மல்லியம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
1938 ஆம் ஆண்டில் வெளிவந்த தேசமுன் னேற்றம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார். பின்னர் சக்ரதாரி (1948), பாரிஜாதம் (1950) ஆகிய திரைப் படங்களை இயக்கினார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளையும் வெற்றி கரமாக இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, பி. ஆர். வரலட்சுமி போன் றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் இந்தியில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வெற்றிகரமாக மறுவாக்கமும் செய்தார்.
பின்னாட்களில் கமலஹாசன் நடித்த பேர் சொல்லும் பிள்ளை என்னும் திரைப்படத் தையும் இயக்கினார். ஆயினும், எழுபதுகளின் இறுதியிலும், எண்பது களின் துவக்கத்திலும் தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குனர்களின் வரவால், கே.எஸ்.ஜி. பாணித்திரைப்படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. படிக்காத பண்ணையார், பேர் சொல்லும் பிள்ளை போன்ற அவர் படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியுற்றன.
இவர் இயக்கிய திரைப்படங்கள்
பணமா பாசமா, உயிரா மானமா, குலமா குணமா, சித்தி, கை கொடுத்த தெய்வம், தெய்வத்தின் தெய்வம், நத்தையில் முத்து, ஆதி பராசக்தி, குறத்தி மகன், என்னதான் முடிவு, சின்னஞ்சிறு உலகம், செல்வம், சாரதா, மாலதி, தெய்வப்பிறவி, ஆயிரம் ரூபாய், கற்பகம்