குருப் (திரைப்பட விமர்சனம்)

9

படம் : குருப்

நடிப்பு: துல்கர் சல்மான், இந்திரஜித் சுகுமாறன், சோபிதா துலிபாலா,  சன்னி வாய்னே, ஷினெ டம் சிக்காகோ, பரத், சுரபி லட்சுமி,

இசை: சுஷின் சியாம்

ஒளிப்பதிவு:  நினிஷ் ரவி

தயாரிப்பு: வேஃபரெர் ஃபிலிம்ஸ், எம்   ஸ்டார்  எண்டர்டெயின்மெண்ட்

இயக்கம்: ஸ்ரீநாத் ராஜேந்திரன்

உன்மை கதைகளுக்கு மவுசு கூடியிருக்கும் இந்தகாலகட்டத்தில் மற்றொரு உண்மை சம்பவத்தை மையாக வைத்து ’குருப்’ கதை உருவாகி இருக்கிறது.

துல்கர் சல்மான் விமான படை பிரிவில் சேர்கிறார். அங்கிருந்து அவர் திடீரென்று வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறார்.  சில தினங்களில் அவர் உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து ஊருக்கு செல்கிறார். மீண்டும் திரும்பவில்லை. தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது.  போலீஸ் விசாரணையில் துல்கர் இறக்கவில்லை என்பது தெரிகிறது. வெளிநாட்டில் செய்துவைத்த 8 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்காக அவர் நாடமாடுவதாக போலீஸ் கண்டறிகிறது. துல்கரின் பெரிய திட்டம் வேறு ஒன்று இருப்பதாக போலீஸ் மோப்பம் பிடித்தாலும் அதை முற்றிலுமாக கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது. எலியை துரத்தும் பூனைபோல் துல்கரை போலீஸ் துரத்துகிறது கடைசியில் துல்கர் போலீஸ் பிடியில் சிக்குகிறாரா? இல்லையா? என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

60 காலகட்டங்கள் தொடங்கி 80 காலகட்டங்கள் வரை நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. இதில்  சுதாஹார குருப்பாக முற்றிலும் மாறுபட்ட வேடத்தை ஏற்று ஆளே மாறியிருக்கிறார் துல்கர் சல்மான்.

விமான படை பயிற்சியில் சேரும் அவர் அங்கேயே சில திருட்டுத்தனங்களை செய்து அதில் லாபம் பார்த்து ருசிகண்ட பூனையாகிறார். பின்னர் பெரிய திட்டத்துடன் அங்கிருந்து வெளியேறும் அவர். பல ஊர், பல நாடுகள் சுற்றித்திரிந்து அவர் போடும் ரகசிய திட்டங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகும்போது மலைப்பு ஏற்படுகிறது.

இன்சூரன்ஸ் பணம் 8 லட்சத்தை அடைவதற்காக அவர் நண்பர்களுடன் சேர்ந்து தற்கொலை நாடகம் ஆடும்  தருணங்கள் பல புதிர்களுக்கு தொடக்கமாக அமைகிறது. திடீரென்று வெளிநாட்டில் இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி விடுகிறார் என்றெல்லாம் காட்சிகள் மர்மாகவே வெளிப்படுத்தப்பட்டாலும் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் அதற்கான விடைகளை இயக்குனர் அளித்து சஸ்பென்ஸை நிறைவு செய்கிறார்.

துல்கருக்கும் இது புது வேடம், இந்த வேடத்தில் அவரை பார்ப்பது ரசிகர்களுக்கும் புது அனுபவம். 80 கால கட்டங்களின் ஹேர் ஸ்டைலில் நடிப்பதும்,  பல பெரிய வேலைகளை செய்யும் துல்கர் அசால்ட்டான தனது நடை மூலம் கேரகட்ருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

துல்கரின் காதலியாக சோபிதா துலிபாலா வருகிறார். பெரிய வேலை இல்லை. சொன்னதை செய்துவிட்டு செல்கிறார்.போலீஸ் அதிகாரியாக வரும் இந்திரஜித் வேடத்துக்கு செம பொருத்தம். ஒவ்வொரு முறையும் துல்கரை பிடிக்க,நெருக்கமாக வந்து கோட்டை விடுவது பரபரப்பு.

பல ஊர்கள், பல நாடுகள் சுற்றி படப்பிடிப்பு நடத்தி இருக்கின்றனர். துல்கர் இறந்துவிட்டதுபோன்று போலீஸ் பார்வையிலும் ஆனால் அவர் மாறுவேடத்தில் உலகை சுற்றி வருவதாக ரசிகர்கள் பார்வையிலும் காட்டி படத்தின் 2ம் பாகத்துக்கு அடிபோட்டிருக்கிறார் இயக்குனர்  ஸ்ரீநாத் ராஜேந்திரன்.

நினிஷ் ரவி ஒளிப்பதிவு, சுஷின் சியாம் இசை படத்துக்கு துணை நிற்கிறது.

குருப்- உண்மைக்கதையில்,ஒரு ஆக்‌ஷன்.

Leave A Reply

Your email address will not be published.