குட்டி ஸ்டோரி (பட விமர்சனம்)

90

படம் : குட்டி ஸ்டோரி

நடிப்பு : கவுதம் வாசுதேவ் மேனன், அமலாபால், ரோபோ சங்கர், வினோத், மேகா ஆகாஷ், அமிர்டாஷ், வருண், சங்கீதா, விஜய் சேதுபதி, அதிதி பாலன்

ஒளிப்பதிவாளர்கள்: மனோஜ் பர மகம்சா, அரவிந்த் கிருஷ்ணன், சக்தி சரவணன், என்.சண்முகசுந்தரம்

இசை அமைப்பாள்ர்கள்: கார்த்தி, மது, பிரேம்ஜி அமரன், ஹெட்வின் லூஸ் விஸ்வாத்
தயாரிப்பு:வேல்ஸ் இண்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ்
இயக்குனர்கள்: கவுதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி

ஆந்தாலஜி படங்கள் ஓடிடி தளங்களில் அதிகம் வருகின்றன. தற்போது தியேட்டர்களிலும் வரத் தொடங்கி உள்ளது. நான்கு பிரபல இயக்குனர்கள் கவுதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கி உள்ள குறும்படங்கள் இணைந்து குட்டி ஸ்டோரி என்ற டைட்டிலுடன் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

கவுதம் மேனனின் எதிர்பாராத முத்தம்::

இயக்குனராக இருக்கும் கவுதம் மேனன் சமீபகாலமாக நடிப்பிலும் தலைகாட்டுகிறார். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், அமலாபால் நட்புடன் பழகுகின்றனர். இறுதி நாளில் அமலாபாலுக்கு இரவு விருந்து அளிக்கும் கவுதம் மேனன் அவருக்கு ஒரு முத்தம் தருகிறார். அமலாபால் கோபித்துக்கொண்டு செல்கிறார். பல ஆண்டுகள் கழித்து கவுதம் மேனனை சந்திக்க வருகிறார். அப்போது அவரிடம் மனம்விட்டு பேசுகிறார். அந்த உரையாடலில் அமலாபாலின் காதல் வெளிப்படுகிறது. இறுதி முடிவு என்ன எடுக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

ஏ.எல்.விஜய்யின் அவனும் நானும்:

பாய்ஃபிரண்டுடன் மழைக்காக ஓட்டலில் ஒதுங்குகிறார் மேகா ஆகாஷ்,  அங்கு சில எதிர்பாரத்த சர்ப்ரைஸ் நடக்கிறது. இதில் மேகா கர்ப்பமாகிறார். பாஃய்பிரண்டை தேடி  கிடைக்கவில்லை. கர்ப்பிணியான அவர் குழந்தை பெற்றெடுக்கிறார். பாய்ஃபிரண்டு என்ன ஆனார் என்பது சஸ்பென்ஸ். இதில் அமிர்டாஷ் பிரதான், ஆர்யா, புஜ்ஜிபாபு நடித்திருக்கின்றனர்.

வெங்கட் பிரபுவின் லோகம்::

வருண், சங்கீதா, சாக்‌ஷி, அகர்லால், லுத்புதீன் நடித்திருக்கின்றனர். வீடீயோ கேம் பிரியர் வருண் கடினமான சவால்களை வென்று பிரபலமாக இருக்கிறார். லோகம் என்ற வீடியோ கேம் ஆடும்போது உடன் ஆடும் சக பெண்ணுடன் காதல் மலர்கிறது. திடீரென்று  கேமிலிருந்து அந்த பெண் விலக வருண்  அவள் நினைவாகவே இருக்கிறார். இதன் முடிவை  கிளைமாக்ஸ் சொல்கிறது.

நலன் குமாரசாமி ஆடல் பாடல்:

திடிரென வரும் போன் அழைப்பில் செட்டப் பேச அவரிடம் கொஞ்சி பேசி ஜொள்ளுவிடுகிறார் விஜய்சேதுபதி,  ஆனால் கடைசியில் அதில் பேசியது தனது மனைவி அதிதி பாலன் என தெரிகிறது. அவர் கோபமாக விஜய் சேதுபதியை கன்னத்தில் அறைகிறார். மறுநாள் அதிதி பாலன் விஜய் சேதுபதிக்கு அதிர்ச்சி செய்தி சொல்கிறார். அதன்பிறகு நடப்பதை குறும்படம் விளக்குகிறது.

குட்டி கதைகள் ஒவ்வொன்றும் காதலை சுற்றியே வருவதால் காதலர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ளனர். 2 மணி நேரத்தில் கிடைக்காத வாய்ப்பு 20 நிமிட கதையில் நடிகர்களுக்கு கிடைத்துவிடாது என்றாலும் ஏற்ற வேடங்களை எல்லோரும் சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.

குட்டி ஸ்டோரி – காதல் சிலுமிஷங்கள்

Leave A Reply

Your email address will not be published.