வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள ஆந்தாலஜி படமான ‘குட்டி ஸ்டோரி’ படத்தில் இடம் பெற்றுள்ள நான்கு கதைகளின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் பிப்ரவரி 12ம் தேதி இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. நான்கு கதைகளுமே காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்பாரா முத்தம்
இயக்கம் – கௌதம் மேனன்
இசை – கார்த்திக்
நடிப்பு – கௌதம் மேனன், அமலா பால், வினோத் கிஷன், ரோபோ சங்கர்
அவனும் நானும்
இயக்கம் – விஜய்
இசை – மது
நடிப்பு – அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ்
லோகம்
இயக்கம் – வெங்கட் பிரபு
இசை – பிரேம்ஜி அமரன்
நடிப்பு – வருண், சங்கீதா, சாக்ஷி அகர்வால், லுத்புதீன்
ஆடல் பாடல்
இயக்கம் – நலன் குமாரசாமி
இசை – எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
நடிப்பு – விஜய் சேதுபதி, அதிதி பாலன்