பள்ளி விண்ணப்பத்தில் சாதியை ஒழிக்க வேண்டும்..

குழலி பட விழாவில் ஆர்.வி.உதயகுமார் பேச்சு..

65

முக்குழி பிலிம்ஸ் சார்பில் எஸ்.ஜெயராம் தயாரிக்கும் படம் குழலி. செரா, கலையரசன் இயக்கி உள்ளார். விக்னேஷ், ஆரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். டி.எம்உதய்குமார் இசை அமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு சமீர்..


இப்படத்தின் ட்ரெயலர் பாடல்கள் நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது. விழாவில் திரைப்பட இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஜாகுவார் தங்கம், நடிகை ஊர்வசி, கல்வி ஆர்வலர் சபரிமாலா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
குழலி திரைப்படம் சாதி கொடுமைம்பற்றியும், கல்வியின் முக்கியத்துவத்தை பற்றியும் பேசுகிறது. இயக் குனர் ஆர்.வி,உதயகுமார் பேசும்போது கூறியதாவது:
குழலி டிரெய்லர், பாடல் திரையிட்ட உடனே நான் மேடையில் பேசி இருக்க வேண்டும். இந்த படத்தின் மூலம் மிகச் சிறந்த படைப் பாளி உருவாகிக் கொண்டிருக் கிறார் இயக்குனர் செரா கலையரசன். நான் எனது கிழக்கு வாசலில் எப்படியெல் லாம் காட்சிகள் அமைத்தேன் என்பதெல்லாம் குழலி படத்தின் காட்சிகளை பார்த்த போது எனக்கு ஞாபகம் வந்து விட்டது. இந்த படத்தில் பணியாற்றியவர் களுக்கெல் லாம் மிகப்பெரிய பெயர் வரப்போகிறது.


பிரதமர் மோடி மிகப் பெரிய அறிவிப்பை வெளியிட்டிருக் கிறார். பட்டியலினத்தவர் என்று சொல்லக்கூடிய நான்கைந்து சாதியினரின் வேண்டுதலை ஏற்று இனி அவர்கள் எல்லோரும் தேவேந்திர குல வேளாளர் என்று இந்திய சட்டப்படி அழைக்கப்படுவார்கள் என அறிவித்திருக்கிறார்கள். அது மிகப்பெரிய விஷயம்.
சாதியத்தை அடிப்படையாக வைத்து நிறைய விஷயங்கள் இப்போது வந்துக் கொண்டி ருக்கிறது. பாரதியிலிருந்து சாதிகள் இல்லையடி பாப்பா ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று படித்தோம் ஆனால் வீட்டில் அதே சாதி பற்றிதான் பேசுகிறோம். எதார்த்தம் என்பது வேறு எதைநோக்கிப்போகிறோம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதன் மனது என்ன நினைக்கிறதோ அதுதான். எனக்கு சாதி இல்லை என்று ஒவ்வொரு வரும் நினைத்தாலொழிய இந்த சாதியை ஒழிக்க முடியாது. எனக்கு சாதி கிடையாதுன்னு நினைத்தால் சாதியை ஒழிக்க முடியும்
பள்ளிகூடத்திற்ற்கு போனால் சாதி பெயர் சேர்த்து எழுதுகி றார்கள் பள்ளிக்கூடத்தில் ஏன் சாதி என்ன என்று கேட்கிறீர் கள். விண்ணப்பத்திலிருந்து அதை நீக்குங்கள். மத்திய அரசுக்கு என்னுடைய ஒரே வேண்டுகோள். சாதி என்ற பதிவை நீங்கள் பள்ளிக்கூட

 

விண்ணப்பத்திலிருந்து எடுத்துவிடுங்கள். அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். டிவியை திறந்தால் சாதிகள் பெயரில் மேட்ரிமோனி விளம்பரங்கள் காசு கொடுத்து பரப்புகிறார்கள். எங்கு மாறப் போகிறது சாதி. இதுஒரு குழலி படத்தால் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய குரலாக ஒலித்தால் மட்டும்தான் சாதி ஒழிப்பு சாத்தியம். அந்த வேகம், வெறுப்பு படத்தில் இருந்தது. இந்த மாதிரி படங் களை எடுத்துத்தான் சாதி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமா? நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது.
சபரிமாலா இங்கு பேசும் போது இந்த படத்தை வாழ்த்தியதை நாம் அனை வரும் வாழ்த்தியதாக எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் கூறினார். அனைவரையும் பி ஆர் ஒ ரியாஸ் அஹமத் வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.