.பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக கேவி ஆனந்த்துக்கு அதிகாலை வீட்டில் இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் கேவி ஆனந்த் மரணம் அடைந்தார்.
மறைந்த கே வி ஆனந்துக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரது உடலை வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க மறுக்கப்பட்டது.
வேனில் வைத்து அவரது உடல் சாஸ்த்ரி நகரில் உள்ள வீட்டருகே கொண்டு வரப்பட்டு 5 நிமிடத்துக்கு பிறகு அப்படியே பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.