இந்தி திரையுலக மூத்த பாடகி லதா மங்கேஷ்கர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக தெரிவிக்கப்பட்டது
ஆனால் இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
மத்திய மந்திரி நிதின் கட்காரி அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்
பின்னர் சிறிது நேரத்தில் லதா மங்கேஷ்கர் மரணம் அடந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வயது 92.
“லதா மங்கேஷ்கர் காலமாகி விட்டதாகவும், அவரது ஆன்மா சாந்தி அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாலிவுட், கோலிவுட் உள்ளிட்ட படவுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜி வீட்டுக்கு லதா மங்கேஷ்கர் வந்தபோது அவரை குடும்பத்தினர் வ்ரவேற்ற காட்சி.படங்கள்