விஜயின் ‘மாஸ்டர்’ இணையதளத்தில் ‘லீக்’

19

மாஸ்டர் படத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில், ‘லீக்’ ஆனதால், கோலிவுட் வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளன.

கொரோனா தாக்கம் தணிந்த நிலையில், பொங்கல் முதல் தியேட்டர்கள் சுறுசுறுப்பாக இயங்க உள்ளன. விஜய், விஜய் செதுபத் நடித்த மாஸ்டர் படம் வெளியாவதே இதற்கு முக்கிய காரணம். ஒன்றரை ஆண்டாக மாஸ்டர் படம், தியேட்டரில் வெளியாகவே காத்திருந்தது.

இந்நிலையில், வினியோகஸ்தர்களுக்கு திரையிடப்பட்ட மாஸ்டர் படத்தின் சில காட்சிகள், நேற்று இணையத்தில் வெளியாகி, மாஸ்டர் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சில மணி நேரத்தில் அக்காட்சிகள், ‘வாட்ஸ் ஆப், பேஸ் புக், டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளத்தில் பரவின.

படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் கூறுகையில், ‘ஒன்றரை ஆண்டு உழைப்பு. மாஸ்டர் படத்தை தியேட்டரில் கொண்டாடுங்கள். படத்தின் காட்சிகளை இணையத்தில் பரப்ப வேண்டாம்’ என, வேண்டுகோள் விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.