எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய மூக்குத்தி அம்மன் பட பாடல் வீடியோ..

இயக்குனர் ஆர்,ஜே.பாலாஜி வெளியிட்டார்

14

அம்மன் வேடத்தில் நடிகை நயன்தாரா  நடித்திருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி யுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக் குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார்.

இது முழுக்க காமெடி படம் என்றாலும் இந்த கால அரசிய லை நெய்ய புடைக்கும் பட மாக உருவாகி இருக்கிறது என்பது ட்ரெய்லரில் தெரிகிறது.. மாறுபட்டட அம்மன் படமாக உருவாகி இருக்கும்  இப்படத்தை  வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து இருக்ககிறார்.  வருகிற தீபாவளி அன்று டிஸ்னி பிஸஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.  மூக்குத்தி அம்மன் பட படப்பிடிப்பு தள வீடியோ ஒன்றை ஆர்,ஜே. பாலாஜி டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

பக்தி பாடல்களும், திரைப்பட பாடல்களும் பாடிய பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது அவரை பாலாஜி வரவேற்றனர். அப்போது மேளதாளம் மயிலாட்டம் எல்லாம் தூள் பறக்கிறது. எல்.ஆர்.ஈஸ்வரி யை வரவேற்ற பாலாஜி  ஆட்டம் ஆட அவருடன் எல் ஆர் ஈஸ்வரியும் ஆடினார்.  இப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி நடித்தும் இருக்கிறார்,

தற்போது எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய முக்குத்தி அம்மனுக்கு என்ற பாடல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. வழக்கம்போல் எல்.ஆர்.ஈஸ்வர் குரலில் பக்தி ரசம் சொட்டுகிறது

 

Leave A Reply

Your email address will not be published.