சத்தியமே லட்சியமாய் கொள்ளடா.. பாடலாசிரியர் அ. மருதகாசி பிறந்த தினமின்று?

79

சத்தியமே லடசியமாய் கொள்ளடா என்ற பல புகழ்பெற்ற பாடகள் ர்ஹந்தவர் அ.மருதகாசி. 1950களில் மிக வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர். ஜி ராமனாதன், கே வி மகாதேவன், டி ஆர் பாப்பா என அன்றைய முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான வெற்றிப் பாடல்களை வழங்கிய இவர், மேலக்குடிகாடு என்ற சிற்றூரில் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் எழுதிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை நாலாயிரத்தையும் தாண்டும்.

÷மெட்டுக்கு விரைந்து பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. உடுமலை நாராயண கவிக்கு மெட்டுக்கு எழுதுவது சிரமமாக இருந்ததால், இந்திப் பாடல்களின் தமிழ்மொழி மாற்றத்துக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராகவும் ஆனார்.

÷””நீலவண்ண கண்ணா வாடா” என்று மங்கையர் திலகம் படத்தில் இவர் எழுதிய பாடல் குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படங்களில் தீட்டப்பட்ட பாடல்களுக்கெல்லாம் மகுடம் எனக் கூறலாம். குழந்தைகளுக்கான திரைப்பாடல்களை அதிகம் எழுதியவரும் இவராகத்தான் இருக்கும்.

÷”சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’, “சமரசம் உலாவும் இடமே’, “முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’, “ஆனாக்க அந்த மடம்’, “வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே’, “காவியமா? நெஞ்சின் ஓவியமா?’ – முதலிய இவர் எழுதிய திரைப்பாடல்கள் நெஞ்சை விட்டு என்றும் அகலாதவை.

இவரது கைவண்ணத்தில் உருவான விவசாயம் சார்ந்த திரைப்பாடல்கள் தமிழகத்தின் கடைக்கோடி சாமானியனும் இன்றளவும் முணுமுணுக்கக் கூடியது என்றால் அது மிகையன்று. “மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி”, “ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே”, “மாட்டுக்கார வேலா உன் மாட்ட கொஞ்சம் பாத்துக்கடா” என்று வேளாண் பெருமக்களின் பெருமையை கூறும் இந்தப் பட்டியல் நீளும்.

இன்டர்மீடியட் வரை படித்த இவர், ஆரம்பக் காலங்களில் நாடக நடிகராகவும் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும,; நாடகப்பாடல்கள் எழுதியும் பணிபுரிந்திருக்கின்றார்.

திருச்சி லோகனாதன் தான் அமைத்திருந்த மெட்டுகளுக்கு, இவர் எழுதியிருந்த பாடல்களை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் பாடிக் காட்ட, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து அழைப்பு வந்தது அ.மருதகாசிக்கு. “பெண்ணெனும் மாயா பேயாம் பொய் மாதராய்” என்று ஆரம்பமாகும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான “மாயாவதி” படப்பாடல்தான் இவர் எழுதிய முதல் திரைப்படப்பாடல். இப்படம் வெளியான ஆண்டு 1949.

இதனைத் தொடர்ந்து “தூக்கு தூக்கி”, “பாசவலை”, “அலிபாபாவும் 40 திருடர்களும்”, “மங்கையர் திலகம்”, “தாய்க்குப் பின் தாரம்”, சதாராம், “அமரதீபம்”, “மல்லிகா”, “நீலமலைத்திருடன்”, “சாரங்கதாரா”, “உத்தமபுத்திரன்”, “பாகப்பிரிவினை”, “பாவை விளக்கு”, “மன்னாதி மன்னன்”, என 1950களில் ஏராளமான படங்களுக்கு எண்ணற்ற வெற்றிப் பாடல்களை தந்து பிஸியான பாடலாசிரியராக இருந்து வந்தார்.

60களில் பெரும்பாலான தயாரிப்பாளர்களின் பார்வை கவிஞர் கண்ணதாசனின் மீது விழ, இவருக்கு சற்று வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. அல்லி பெற்ற பிள்ளை என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நஷ்டம் அடைந்தார். 1967 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு மீண்டு வந்தபின் தேவர் தயாரித்து எம் ஜி ஆர் நடிக்கவிருந்த “மறுபிறவி” என்ற திரைப்படத்திற்கு இவரை பாடல் எழுத தேவர் கேட்டுக் கொண்டார். ஒரு பாடல் எழுதிய நிலையில் படத்தை தொடர முடியாமல் போயிற்று. அதன் பின் தேவர் தயாரிதத “தேர்த்திருவிழா”, “விவசாயி” வெள்ளிக்கிழமை விரதம் என்று தொடர்ந்து தேவர் தயாரித்து வந்த படங்களில் இவரது பாடல்கள் இடம் பெற்று வந்தன. ஏறக்குறைய 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய இவர் 4000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.

இன்றைக்கும் பாமரன் முதல் படித்தவன் வரை அனைவரும் விரும்பும் வண்ணம் காதல், பாசம், சோகம், தத்துவம், வீரம் என்று அத்தனை பரிமாணங்களிலும் காலத்தால் அழிக்க முடியா காவியப் பாடல்களைத் தந்த இந்த கவிஞரை அவரது பிறந்த நாளில் நினைவு கொள்வதில் பெருமை கொள்வோம்.

Leave A Reply

Your email address will not be published.