தாய்நிலம் படத்திற்காக கவிஞர் தாமரை எழுதிய பாடல்

10

 

ஈழத்தமிழர்களின் வலியையும் வாழ்க்கையையும் சொல்லும் விதமாக அவ்வப்போது சில படங்கள் வெளியாகின்றன அந்த வகையில் அப்பா, மகள் பாசப்பின்னணியில் இலங்கை போரின் கோரதாண்டாவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “தாய்நிலம்” நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமசந்திரன் தயாரித்துள்ள இந்த படத்தை அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார்

ரஷ்யா, ஸ்வீடன், டொராண்டோ உட்பட
இதுவரை பதினோன்று சர்வதேச திரைப்பட விழாக்காளில் தேர்வான இத்திரைப்படம் பல பிரிவுகளில் எட்டு விருதுகளை வென்றிருக்கிறது…

தேசிய விருதுபெற்ற பிரபல மலையாள இசை அமைப்பாளர் திரு அவுசப்பச்சன் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்

இத்திரைப்படத்தில் கவிஞர் தாமரை எழுதி வர்ஷா இரஞ்சித் பாடியுள்ள “ஆகாயம் மேலே” என்ற பாடல் இலங்கை தமிழ் மக்களின் இழப்புகளையும், வலியையும் அனாதையாக தவிக்கும் மக்களின் வாழ்க்கையையும் கூறும் விதத்தில் அமைந்திருக்கிறது..

கேட்பவர்களில் மனதில் ஆழமாக பதிந்துவிடும் வகையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் நாளை
(வெள்ளிக்கிழமை) அன்று சரிகம தமிழ் குழுமத்தின் யூட்யூப் பக்கத்தின் வாயிலாக வெளியிடப்படுகிறது..

அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் இந்தப் பாடல் இந்தவருடத்தின் ஒரு மாபெரும் வெற்றிப்பாடலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை…

Leave A Reply

Your email address will not be published.