கவிஞர் விக்டர்தாஸின் தந்தை காலமானார

3

*பாடலாசிரியர் கவிஞர் விக்டர்தாஸின் தந்தை காலமானார்.*

பிரபுதேவா, ஜோதிகா, ராஜூ சுந்தரம், நாகேந்திர பிரசாத் இணைந்து நடித்த 123 படத்தில் இடம்பெற்ற “அடடா நடந்து வர்றா” உள்பட பல பாடல்களை எழுதி இருப்பவர் கவிஞர் விக்டர்தாஸ். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் தமிழ் திரையுலகுக்கு அழைத்து வரப்பட்டவர், கவிஞர் விக்டர்தாஸ்.
எதிரி, பாறை, 123, ஆயிரம் பொய் சொல்லி, ஆணை, நிலவினிலே, சாணக்யா உள்பட பல படங்களில் பாடல் எழுதியுள்ள விக்டர்தாஸின் தந்தை எஸ். ஜோசப் பெனடிக்ட், உடல்நலக் குறைவால் நேற்று இயற்கை எய்தினார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று (14.08.2021) மாலை 5 மணிக்கு, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், புனித பாத்திமா தேவாலய கல்லறைத் தோட்டத்தில் வைத்து நடைபெறுகிறது.

Leave A Reply

Your email address will not be published.