எம்.சக்திவேல் இயக்கும் “புரடக்ஷன் நம்பர் 12 “ பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு

1

 

அக்சஸ் ஃபிலிம்பேக்டரி (Axess Film Factory) நிறுவனத்தின் தயாரிப் பாளர் ஜி.டில்லிபாபு தயாரிப்பில், தற்போதைக்கு Production No 12 என தலைப்பிடப்பட்டு, நடிகர்கள் பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முழுப்படப் பிடிப்பும் முடிவடைந் துள்ளது. இபடத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடை பெற்றதை தொடர்ந்து, இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடை பெற்றது.

Axess Film Factory நிறுவன தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு இது குறித்து கூறியதாவது:

எங்கள் நிறுவனத்தின் “Production No 12” படத்தின் முழுப்படப்பிடிப்பும் இனிதே முடிவடைந் துள்ளது. மிக திறமை மிகுந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவின ருடன் இணைந்து பணி யாற்றிய இந்த அனுபவம், மிக மகிழ்ச்ச்சிகரமா னதாக இருந்தது. பரத் , வாணி போஜன், இயக்குநர் கே.எஸ்.ரவிக் குமார் ஆகியோர் அவரவர் கதாப்பாத்திரங்களில் மிக அற்புதமான நடிப்பினை தந்துள்ளார்கள். இயக்குநர் எம்.சக்திவேல்  இயக்கும் முதல் படம் போல இல்லை, மிக அனுபவமிக்க ஒரு இயக்குநரை போலவே அவர் இப்படத்தை இயக்கியுள்ளார். அவர் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்கு நராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் விரும்பப்படும் இயக்கு நராக விரைவில் மாறுவார். இயக்குநராக அவரது திறமையை தாண்டி, அவரது திட்டமிடலிலும் அதை செயல்படுத்தும் விதத் திலும் மிகச்சரியாக செயல்பட்டு, இப்படத்தை திட்டமிட்ட பட்ஜெட்டில், உரிய கால அவகாசத்தில் முடித்தது மிக பிரமிப் பானது என்றார்.

மேலும் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அதைத்தொடர்ந்து டிரெய்லர், திரை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றார்.

பரத், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, கே எஸ்..ரவிக் குமார், ராஜ்குமார், காவ்யா முக்கிய கதாப்பாத்திரங் களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்ராஜ்  உதவியாளர் எஸ். சுரேஷ் பாலா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.கலை வாணன் இப்படத்திற்கு படத் தொகுப்பு செய்கிறார். எஸ். பி மணிகண்டன் கலை இயக்கம் செய்துள்ளார். இத்திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் எம்.சக்திவேல் கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கு கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபர திரில்லர் வகைப்படமாக இப்படம் இருக்குமென படக்குழு தெரிவித் துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.