ஓடிடியில் வெளியாகும் மாடத்தி

2

பிரபல பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை. ஏராளமான டாக்குமென்டரி படங்களை இயக்கி உள்ள இவர் செங்கடல் என்ற படத்தையும் இயக்கினார். தற்போது மாடத்தி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படம் திருநெல்வேலி பகுதியில் சலவை தொழில் செய்யும் சமூகத்தினரின் வாழ்வியல் பற்றியது. அந்த சமூகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம்.

இந்த படம் தென் கொரியாவின் பூசான் திரைப்பட விழா, கோல்கட்டா சர்வதேச திரைப்பட விழா, லத்தீன் அமெரிக்க திரைப்பட விழா, சிகாகோ தெற்காசிய திரைப்பட விழா, அவுரங்காபாத் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றது. அதோடு பிரான்ஸ் நாட்டின் லெரிம்பாட் விருதுக்கான இறுதி பட்டியலிலும் தேர்வானது.

படத்திற்கு ராமானுஜம் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் மற்றும் அருள் குமார் ஆகியோருடன் அந்த சமூக மக்களும் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார்.

படத்தின் டீசரை மஞ்சு வாரியர், பிரித்விராஜ் , ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலிமேனன், கீது மோகன் தாஸ், சேரன், ஆஷிக் அபு, பா ரஞ்சித், வசந்தபாலன், சி எஸ்அமுதன், ரீமா கல்லிங்கல், நீரஜ் கய்வான், தமிழச்சி தங்கபாண்டியன், என். எஸ்.மாதவன், ரோஹிணி, எஸ்.ஆர். பிரபு, டி.எம். கிருஷ்ணா, ஷோபா சக்தி உட்பட பலர் வெளியிட்டுள்ளனர். வருகிற 24ம் தேதி நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

Leave A Reply

Your email address will not be published.