மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்த “மாறா”

இசையை கைப்பற்றிய திங்க் மியூசிக்

26

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடித்த “மாறா

 

இசை கைப்பற்றிய திங்க் மியூசிக

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான “மாறா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் நேரிடையாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வரும்  டிசம்பர் 17 அன்று வெளியாகிறது.

தற்போது படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் பெற்றுள்ளது படத்திற்கு மேலும் பெரும் பலம் சேர்த்துள்ளது.

ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் இது குறித்து கூறியதாவது…..

 

 

 

 

தென்னகத்தில் இசைத்துறையில், ஜாம்பவானாக திகழும் திங்க் மியூசிக் நிறுவனத் துடன், ணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு ஆல்பமும் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஒரு இசை ஆல்பத்தை அவர்கள் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் விதம் பிரமிக்க தக்கதாக இருக்கிறது. மிகுந்த உழைப்புடன், புத்தம் புது ஐடியாக்க ளுடன் பட்டிதொட்டி வரை படத்தின் இசையை கொண்டு சேர்த்துவிடும் திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் எங்களின் “மாறா” படம் திங்க் மியூசிக் நிறுவனத்தின் வழியாக வெளியாவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அதையும் தாண்டி இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் திங்க் மியூசிக் நிறுவனம் இணைந்து வெளியிட்ட முந்தைய ஆல்பங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

குறிப்பாக ஜிப்ரானின் முதல் ஆல்பமான “வாகை சூடவா” திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டு  பம்பர் ஹிட்டானது. காதல் கதையில் இந்த இரண்டு பெயர்களும் இணையும் போது ரசிகர்களிடம் அதற்கென்றே ஒரு தனித்த வரவேற்பு எப்போதும் உணடு. அந்த வகையில் “மாறா” மிகப்பெரும் வெற்றியை சொல்லி அடிக்கும் ஆல்பமாக இருக்கும்.

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற “கல்கி” படத்தினை உருவாக்கி புகழ்பெற்ற திலீப் குமார் இப்படத்தை இயக்கு கிறார். பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதி யுள்ளார். மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் தவிர தமிழின் மிகப்பெரும் நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். படத்தொகுப்பை புவன் ஶ்ரீநிவாசன் செயதுள்ளார். . ஒளிப்பதிவு கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் பி செய்துள்ளார்கள் மற்றும் கலை இயக்கத்தை அஜயன் ஜலிசரி செய்துள்ளார்
தபஸ் நாயக் இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். ஸ்பலாட் ஸ்டூடியோ  விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளனர். ஏக் லகானி மற்றும் ரெம்யா சுரேஷ் உடை வடிவமைப்பை செய்துள்ளனர். SP cinemas லைன் புரடக்சன் பணியை செய்துள்ளனர். தயாரிப்பு ஒருங்கிணைப்பை கோகுல் செய்துள்ளார்.

ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.