மூலப் பொருடகள் விலையேற்றம் : அரசுக்கு ம நீ ம தலைவர் கமல்ஹாசன் குரல்..

0

மூலப்பொருடகளின் விலையேற்ற போரட்டத்தை மத்திய மாநில அரசுகள் கண்டும் காணாமலிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள தகவல்:

“மூலப்பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களைத் தள்ளாட வைத்திருக்கின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. #MSME போராட்டத்தைக் கண்டும் காணாதிருக்கும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும்”.

– தலைவர் கமல் ஹாசன்

Leave A Reply

Your email address will not be published.