தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – “ஏணிப் போராட்டம்” இன்று (10.07.2021) நடத்தப்பட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் துணைத்தலைவர் (கட்டமைப்பு) A.G, மௌரியா (RTD. IPS Officer) தலைமையில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மாநில செயலாளர் கவிஞர். சினேகன் (இளைஞர் அணி),
செந்தில் ஆறுமுகம் (ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு),
சரத் பாபு (தலைமை நிலையம்),
சு. ஆ. பொன்னுசாமி (தொழிலாளர் நல அணி),
கிருபாகரன் (சமூக ஊடகம் & தகவல் தொழில்நுட்பம்),
முரளி அப்பாஸ் (செய்தித் தொடர்பாளர், மாநில செயலாளர் ஊடகப் பிரிவு),
வினோத் (ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு),
மாநில இணை செயலாளர் சுரேஷ் பாபு (தலைமை நிலையம்),
மற்றும் மாநில துணை செயலாளர்கள் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.
இந்த தகவலை மக்கள் நீதி மய்யம் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.