மக்கள் பணியே மய்யத்தின் கொள்கை

0

கோவையில் 04-12-2021 அன்று பெய்த கனமழை யால், கோவை தெற்குத் தொகுதியில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் 12 அடி உயரம் வரை மழைநீர் நிறைந்தது. அதில் ஒரு கார் மூழ்கியது. பலத்த மழை காரணமாக வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதித்து, மக்கள் மிகுந்த சிரமத்திற் குள்ளாகினர்.

05-12-2021 அன்று காலை 7 மணிக்கு கோவை மத்திய மாவட்டச் செயலாளர் பிரபு அவர்களின் தலைமையில் துணைச் செயலாளர்

ஜே.சத்யநாராயணன், மாநகரச் செயலாளர் மணிக்கொடி சரவணன், வார்டு செயலாளர் விஸ்வநாதன் மற்றும் மய்ய நண்பர்கள் அங்கு சென்று காரை வெளியே எடுக்க முயன்றனர். அப்போது கோவை மாநகர கமிஷனர் அவர்கள் அங்கு வரவே அவரின் அனுமதியுடன் கார் வெளியே எடுக்கப்பட்டது. அவ்விடத்தை சுத்தம் செய்ய நமது மய்ய நண்பர்கள் உதவி செய்தனர்.

இந்த நிகழ்வில்  மய்ய நண்பர்கள்  தாஜுதீன், சித்திக் முஸ்தபா,  அருள்ஜோதி, டாக்டர் சாந்தி விசுவநாதன், சுரேஷ் சக்கரவர்த்தி, ராஜகண்ணிப்பன், ராஜமனோகர்,  மகளிர் அணியைச் சார்ந்த சதீஷ் மோகன், மாநகரச் செயலாளர் சங்கீதா, சித்தாபுதூர் சாந்தி பிரியா, சுரேஷ்பாபு, தளபதி ராஜா வசந்தகுமார், தம்புராஜ், ரமேஷ் சாவித்திரி, செந்தில்குமார், ஞானபிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

மக்கள் பணியே மய்யத்தின் கொள்கை… அதைச் செயல்படுத் துவதே நம்மவர் தொண்டர்களின் குறிக்கோள்.

 

நன்றி!

 

ஊடகப் பிரிவு

மக்கள் நீதி மய்யம்.

Leave A Reply

Your email address will not be published.