படியில் பயணம்… நொடியில் மரணம்’ சரியான தீர்வு தெரியாத அரசு என நம்மவர் தொழிற்சங்கப் பேரவை தலைவர் பொன்னுசாமி தெரிவித் திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது:
படியில் பயணம் நொடியில் மரணம்’ என பேருந்துகளில் எழுதி வைத்து எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத் தினாலும் அதனை புறந்தள்ளிவிட்டு, பணி யில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் கண்டிப்பையும் கவனத்தில் கொள்ளாமல் பள்ளி-கல்லூரி மாணவர் கள் படியில் பயணிப்பதும், அதனால் உயிரிழப்புகள் நிகழ்வதும் தொடர்கதை யாகிவருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
`பீக் ஹவர்ஸ்’ (Peak Hours) என்று சொல்லப்படும் காலை-மாலை நேரங் களில் கூடுதல் பேருந்து கள் இயக்கப்படாத காரணத்தால் பெரும் பாலான பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிய, வேறு வழியின்றி பள்ளி-கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களும், வேலைக்குச் செல்வோரும் கூட்ட நெரிசலில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயணத்தைத் தொடர நேரிடுகிறது.
11.12.2021 அன்று, ராணிப் பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சயனாபுரம் புதுகண்டி கையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ் என்பவர், கல்லூரியிலி ருந்து வீட்டிற்குச் செல்ல நெரிசல் மிகுந்த பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்து பலியா னார். இதேபோன்று கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்திலும் கல்லூரி மாணவர் ஒருவர் பலியா னார். இந்தத் துயரச் சம்பவங்களுக்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் `காலை-மாலை நெரிசல் மிகுந்த வேளை களில் பள்ளி-கல்லூரி களுக்குச் செல்லும் மாணவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதியுறுவதைத் தவிர்க்கவும், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து அதனால் விபத்து ஏற்பட்டு நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் வேண்டு மானால், காலை-மாலை இரு வேளையும் மாணவர் களுக்கென தனிப்பேருந்து இயக்குவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்’ என, சென்ற மாதமே அரசுக்கு கோரிக்கை முன்வைத்தது மக்கள் நீதி மய்யம். மக்கள் நலன் சார்ந்த அந்தக் கோரிக்கை யை தமிழக அரசு வழக்கம்போல் கிடப்பில் போட்டுவிட்டது கண்டிக்கத் தக்கது.
இந்நிலையில் `பேருந்து களின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணி களோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக் கிறது. இதனை, மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கி றது.
ஏற்கெனவே பணிச்சுமை, ஊதியம், ஊக்கத்தொகை, ஓய்வூதியப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் போக்கு வரத்துத் துறை ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் இந்நிலையில், தொழிலா ளர்களை நசுக்கும் விதமான போக்குவரத்துத் துறையின் உத்தரவு விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு அந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தமிழகம் முழுவதும் பழுதடைந்த நிலையில் உள்ள பேருந்துகள் அனைத்தையும் தவிர்த்து புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து அனைத்துப் பேருந்து களிலும் மற்றும் ஏற்கெனவே தரக்கட்டுப் பாட்டோடு இருக்கும் பழைய பேருந்துகளிலும் தானியங்கிக் கதவுகளை அமைத்திடவும், காலை-மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளிலும் தானியங்கிக் கதவுகளை அமைத்திடவும், குறிப்பிட்ட பயணிகளுக்குமேல் ஏற்று வதைத் தவிர்க்கவும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவை மட்டுமன்றி பணியில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் களை அச்சுறுத்து வதையும், தனிப்பட்ட முறையில் தொடர்ந்து இடையூறு செய்வதையும் தவிர்த்து, அவர்களைத் தாக்குவோர் மீது வழக்குப் பதிவுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வலியுறுத்து கிறது.
நன்றி!
இவ்வாறு சு.ஆ.பொன்னு சாமி கூறியுள்ளார்.