பண்டிகை நாட்களில் அரசுத் தேர்வுகளை நடத்தக்கூடாது…

மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

0

பண்டிகை நாட்களில் அரசுத் தேர்வுகளை நடத்தக்கூடாது… தள்ளிவைக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மாநில துணைத்தலைவர் தங்கவேலு  கோரிக்கை விடுத்துள்ளதுள்ளார். இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கை:

உழவுத் தொழிலை போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளா கவும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் இயற்கை யையும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னா ளாகவும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தனித்த அடையாளமான இந்தப் பண்டிகை நாட்களில் அரசுத் தேர்வுகள் நடத்துப்படுவது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

யூபிஎஸ்சி மெயின் தேர்வு  திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வா ணையம் அறிவித்துள்ளது.

தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படும். தமிழ் மக்களின் வாழ்வில் முக்கியமான பண்டிகை என்பதால், பணி நிமித்தமாக வெளி ஊர்களில் வசிப்ப வர்கள் எல்லோரும் சொந்த ஊர்களுக்குச் சென்று தங்கள் சொந்தங்களுடன் பெருமகிழ்வுடன் இந்த விழாவைக்கொண்டாடுவார்கள். உறவுகளும் உணர்வு களும் வலுப்படும் இந்த நாட்களில் தேர்வு நடத்தப்படுவது தமிழர் களின் பண்பாட்டில் கைவைக்கும் செயலாகும்.
அத்துடன், ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாட் களிலும் தேர்வு இருக் கிறது.  எனவே தேர்வர் களின் நலன் பாதுகாப் பினை மத்திய அரசு கருத்தில் கொண்டு  தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்.

பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16. 2022 தேதிகளில் நடத்தப் பட இருந்த அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்ததை அடுத்து தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழைக் கொண்டாடு வதாக நாடகம் இயற்றும் மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளையும் உரிமை களையும் பொருட் படுத்து வதே கிடையாது.

மத்திய, மாநில அரசுகள் போட்டித் தேர்வுகள் தேதி நிர்ணயம் செய்யும் போது, விழாக் காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய அரசு தேர்வர் களின் பாதுகாப்பினை கணக்கில் கொண்டு யூபிஎஸ்சி மெயின் தேர்வு களை தள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு தங்கவேலு கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.